தக்காளி காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
தக்காளி காய்ச்சல் (Tomato Fever)
மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுதும் 82க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பரவுகிறது. கை, கால் வலி மற்றும் வாய்ப்புண் ஆகியவை இதன் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கு இந்தக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அதுதொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. எனவே, மாநில அரசுகள் தக்காளி காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரளாவின் கொல்லத்தில் மே மாதம் முதல் நோயாளி கண்டறியப்பட்டார். இதைத் தொடர்ந்து இதுவரை 5 வயதுக்கு குறைவான 82 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
குழந்தைகளைத் தாக்கும் தக்காளி காய்ச்சல்: நிபுணர்கள் எச்சரிக்கை!
மன அழுத்தத்தில் இந்தியப் பணியாளர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!