News

Tuesday, 11 June 2019 09:22 AM

கோடை வெயிலாலும், மழையின்மை காரணத்தால் காய்கறிகளின் விளைச்சல் தற்போது குறைந்துள்ளது. இதனால் தமிழக பகுதிகளில் இருந்து வரும் காய்கறிகளின் அளவு குறைந்துள்ளது.

கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடக, ஓசூர் ஆகிய எல்லையோரப் பகுதிகளில் இருந்து காய்கறிகள் வந்து கொண்டிருக்கின்றன.
கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு குறைந்துள்ள நிலையில், அவைகளின் விலைகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகின்றன.

கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு குறைந்துள்ள நிலையில், அவைகளின் விலைகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகின்றன.

மேலும் கடந்த வாரம் ரூ 100க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ 120 ஆக உயர்ந்துள்ளது, ரூ 50 க்கு விற்கப்பட்ட அவரைக்காய் நேற்று ரூ 80 ஆக உயர்ந்துள்ளது, வெங்காயம் ரூ 21, சாம்பார் வெங்காயம், பச்சை மிளகாய் தலா ரூ 55, வெண்டைக்காயி ரூ 30, முள்ளங்கி ரூ 25, முட்டைகோஸ், முருங்கைக்காய் தலா ரூ 15, கேரட் ரூ 45 மற்றும் மற்ற காய்கறிகளான தக்காளி, பாகற்காய், கத்திரிக்காய் தலா ரூ 40, உருளைக்கிழங்கு ரூ 16, பீட்ரூட் ரூ 30, புடலங்காய் ரூ 20 என விற்கப்பட்டு வருகின்றன.

மேலும் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், இதன் பிறகே காய்கறிகளின் விளைச்சல் அதிகரிக்கும் மற்றும் உயர்த்தப்பட்ட காய்கறிகளின் விலைகள் குறையும் என்றும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

k.sakthipriya

krishi jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)