நாட்டின் விவசாய, தொழிற் தேவையில் ஐந்தில் இரண்டு பங்கை டீசல் கொண்டுள்ளது. டீசலின் தேவையானது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட ஏப்ரல் முதல் பாதியில் 15 சதவீதம் அதிகரித்து 3.45 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் முதல் பாதியில் இந்தியாவில் டீசலின் விற்பனை கடுமையாக உயர்ந்தது. ஏனெனில் விவசாய நடவடிக்கைகள் அதிகரித்ததாலும் மற்றும் தொழில்துறை தேவையை பூர்த்தி செய்யவும் டீசலின் பயன்பாடு அதிகளவில் தேவைப்பட்டுள்ளது. விவசாயத் துறையிலும், தொழில்துறைக்கான மின் உற்பத்தி தேவைகள் அதிகரித்ததால் டீசலின் தேவை அதிகரித்துள்ளது. நீர்ப்பாசன பம்புகளில் எரிபொருளின் பயன்பாடு மற்றும் டிராக்டர் இயக்க டீசல் தேவைப்படுகிறது.
டீசல்/பெட்ரோல் விற்பனை எப்படி?
பருவகால மந்தநிலையைக் கண்ட மார்ச் முதல் பாதியில் 3.19 மில்லியன் டன்கள் டீசல் நுகரப்பட்டதுடன் ஒப்பிடும்போது, மாதந்தோறும் விற்பனை 8.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, ஏப்ரல் 1 முதல் 15 வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல் விற்பனை சுமார் 2 சதவீதம் அதிகரித்து 1.14 மில்லியன் டன்னாக இருந்தது. இருப்பினும், விற்பனை மாதந்தோறும் 6.6 சதவீதம் குறைந்துள்ளது என்று தரவு காட்டுகிறது. மார்ச் முதல் பாதியில் பெட்ரோல் விற்பனை 1.4 சதவீதமும், டீசல் விற்பனை 10.2 சதவீதமும் குறைந்துள்ளது.
2021-2020 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு:
ஏப்ரல் முதல் பாதியில் பெட்ரோல் நுகர்வு 2021 ஆம் ஆண்டினை விட 14.6 சதவீதம் அதிகமாகும் மற்றும் 2020 ஆம் ஆண்டின் இதே காலத்தை விட கிட்டத்தட்ட 128 சதவீதம் அதிகமாகும். இதைப்போல் டீசல் நுகர்வு (ஏப்ரல் 1-15) 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24.3 சதவீதம் அதிகரித்துள்ளது மற்றும் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 127 சதவீதம் அதிகமாகும்.
ஜெட் எரிபொருள் தேவை:
கொரோனா காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் தற்போது விமானப் போக்குவரத்துத் துறை தொடர்ந்து இயக்கப்படுவதன் மூலம் ஜெட் எரிபொருள் தேவையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, ஏப்ரல் முதல் பாதியில் ஜெட் எரிபொருள் (ATF) தேவை 14 சதவீதம் உயர்ந்து 2,84,600 டன்னாக உள்ளது. இது ஏப்ரல் (1-15), 2021 ஐ விட 35 சதவீதம் அதிகமாகவும், 2020 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 467.6 சதவீதம் அதிகமாகவும் இருந்தது. இருப்பினும் மாதந்தோறும் விற்பனை 3.8 சதவீதம் குறைந்துள்ளது.
சமையல் எரிவாயு எல்பிஜி விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 5.7 சதவீதம் அதிகரித்து (ஏப்ரல் 1-15)-ல் 1.1 மில்லியன் டன்னாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
ரொம்ப அசிங்கமாயிடுச்சு பரமா.. பற்களை துலக்குவதில் இந்தியர்கள் தான் மோசம்