கொரோனா தடுப்பூசியின் இரண்டு, 'டோஸ்'களையும் செலுத்தியோர், ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு, 'பூஸ்டர்' டோசால் கிடைப்பதை விட, அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுதும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு இரண்டு டோஸ்களாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதோடு, பூஸ்டர் டோசும் செலுத்தப்படுகிறது.
பூஸ்டர் டோஸ் (Booster Dose)
பூஸ்டர் டோஸ் குறித்து, ஜெர்மனியைச் சேர்ந்த, 'பயோ என் டெக்' என்ற தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமும், வாஷிங்டன் பல்கலைக் கழகமும் இணைந்து, சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தின. அதன் முடிவுகள் பற்றிய விபரம்: கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தியோர், ஒமைக்ரான் வகை வைரசால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு, பூஸ்டர் டோசால் கிடைப்பதை விட, அதிக நோய் எதிர்ப்பு சக்தி (High Immunity) கிடைக்கிறது.
இது, இதர கொரோனா வகைகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, அதிக பாதுகாப்பு வழங்குகிறது. பலன் தரும் வழக்கமாக பயன்படுத்தப்படும் பூஸ்டர் டோஸ்களை விட, ஒமைக்ரான் வைரசுக்கான பிரத்யேக பூஸ்டர் டோசை மக்களுக்கு செலுத்தினால், அது அவர்களுக்கு அதிக பலன் தரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எனினும், இந்த ஆய்வு முடிவுகளை வைத்து, ஒமைக்ரான் வைரசால் பாதிப்பை ஏற்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுவதை தவிர்க்க, மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
காய்ச்சலுக்கு புதிய பெயர் வைத்தால் மக்களுக்கு பயம்: சுகாதாரத்துறை செயலாளர்!