தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் ஷிப்டு முறையில் வகுப்புகள் நடத்துவது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் தொடக்கத்தில் 200-க்கு குறைவாக இருந்த தொற்று படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவல் வேகமாக உள்ளது.
தடுப்பு வழிமுறைகள்
தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து பரிசோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிக மாணவர்கள் கொண்ட தனியார் பள்ளிகளில் வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் நெருக்கமாக அமர வேண்டிய நிலை உள்ளது.
அதனால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடும் என்பதால் ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது காலை-மாலை என 2 ஷப்டாக வகுப்புகளை நடத்தலாமா? என தனியார் பள்ளிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.வாரத்தில் தற்போது 5 நாட்கள் வகுப்புகள் நடை பெறுகின்றன. கூட்டத்தைக் குறைக்கும் வகையில் வகுப்புகளை 2 ஆக பிரித்து மாணவர்களை வரவழைக்கலாமா? என ஆலோசிக்கின்றனர்.
நிர்வாகிகள் கருத்து
ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவர்களை 2 ஆக பிரித்து ஒருநாள் விட்டு ஒருநாள் (3 நாட்கள்) வகுப்புகளை நடத்தலாமா? என பெற்றோரிடம் கருத்து கேட்கப்படுகிறது. 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளை தவிர மற்ற வகுப்பு மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைத்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் கருதுகிறார்கள்.
வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஒருசில தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் கருத்துக்களை கேட்டு உடனடியாக நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது.
மேலும் படிக்க...
சிகரெட் பிடிக்கும் காளி- வைரல் ஆகும் விபரீதம்!
வீடு வாங்கப் பணத்திற்கு பதிலாக தர்பூசணி- மகிழ்ச்சியில் விவசாயிகள்!