குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் கண்டறியப்பட்டுள்ள இண்டியன் பைரேட் எனும் "டாருகஸ் இண்டிகா" வண்ணத்துப்பூச்சி. சேலம் இயற்கை கழகம் நிர்வாகிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்காடு மலையை ஒட்டியுள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா அருகே உயிரினங்களை கண்டறியும் ஆய்வுக்குச் சென்ற போது புதிய அரிதான வண்ணத்துப்பூச்சியை சேலம் இயற்கை கழகம் அமைப்பை சேர்ந்த முருகேசன் மற்றும் இளவரசன் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து இயற்கை கழகம் நிர்வாகிகள் கூறியதாவது:
ஒளி ஊடுருவும் தன்மை உடைய இறகுகள் கொண்ட அரிய வகை வண்ணத்துப் பூச்சிகள் உள்ளன. அதில் மிகவும் அரிதான இண்டியன் பைரேட் எனும் "டாருகஸ் இண்டிகா" (Indian Pierrot - Tarucus Indica) வண்ணத்துப்பூச்சி சேலம் குரும்பப்பட்டி பூங்காவை அடைந்துள்ளது.
டாருகஸ் இண்டிகா (Tarucus Indica)
இந்த வகை வண்ணத்துப்பூச்சிகள் தமிழில் நிலன் வகை என்று அழைக்கப்படுகின்றன. ஒளி ஊடுருவும் தன்மை உடைய இறகுகள் கொண்டவை. 2 அடி செமீ நீளம் உள்ள இந்த வண்ணத்துப்பூச்சியின் இறகுகள் 26 மிமீ முதல் 29 மிமீ நீளத்துடன் காணப்படும். இவற்றின் வளரும் சூழல், வசிக்கும் தாவரம், வாழ்க்கை சுழற்சி ஆகிய தகவல்களை வனத்துறையினர் மற்றும் உயிரின ஆய்வாளர்கள் உதவியுடன் ஆராய்ந்து பதிவு செய்யவுள்ளோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இவ்வகை வண்ணத்துப்பூச்சிகள் இந்தியாவில் மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
K.Sakthipriya
Krishi Jagran