இந்தியாவில் கோவிட் தடுப்பூசி செலுத்திட தகுதிவாய்ந்தவர்களில் 75 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோவிட் பரவலுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தும் இயக்கம் கடந்தாண்டு ஜன,16 முதல் துவங்கப்பட்டது. இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில்15 - 18 வயதுடையவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கப்பட்டன. இன்று (ஜன.,30) காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 165.70 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசியில் சாதனை! (Record in Vaccine)
இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடைய மக்கள் தொகையில் 75 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மேலும், ‛கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் நாம் வலுப்பெற்று வருகிறோம். நாம் அனைத்து விதிகளையும் பின்பற்றி, அனைவரும் விரைவில் தடுப்பூசி போட வேண்டும்' எனவும் அறிவுறுத்தினார்.
இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதத்தில் பிரதமர் மோடி கூறுகையில், ‛தடுப்பூசி செலுத்திட தகுதிவாய்ந்தவர்களில் 75 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த முக்கியமான சாதனைக்காக நமது சக குடிமக்களுக்கு வாழ்த்துக்கள்' எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க
முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!