News

Sunday, 17 April 2022 12:34 PM , by: R. Balakrishnan

New Corona Vaccine

இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 4 வாரங்கள் வைத்து பயன்படுத்தலாம். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனமும், உயிரி தொழில்நுட்ப ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான மைன்வாக்சும் இணைந்து கொரோனாவுக்கு எதிராக ஒரு புதிய தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசியை குளிர்சங்கிலி வசதியில் வைத்து பாதுகாக்கத்தேவையில்லை. இது ஒரு ‘வெப்ப நிலை’ தடுப்பூசி ஆகும்.

புதிய தடுப்பூசி (New Vaccine)

இந்த தடுப்பூசிகளை 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 4 வாரங்கள் வைத்து பயன்படுத்தலாம். 100 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 90 நிமிடங்கள் வைத்து பயன்படுத்த முடியும். இந்த தடுப்பூசியை எலிகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதில் தடுப்பூசிகள் டெல்டா, ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்திய பெறுவது தெரிய வந்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும், பைசர் தடுப்பூசிகளை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும் வைத்து பாதுகாக்க வேண்டும். இந்த தடுப்பூசி பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

மேலும் படிக்க

தடுப்பூசி பணியில் வேகம் காட்டுங்கள்: அமைச்சர் உத்தரவு!

பூஸ்டர் டோஸ் இடைவெளி: 6 மாதமாக குறைக்க வேண்டும் என கோரிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)