News

Wednesday, 17 August 2022 06:28 PM , by: R. Balakrishnan

Production of food grains

கடந்த 2021 - 22 பருவத்தில், இந்தியா 315.72 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2021 -22 பருவத்தில் இந்தியாவில் 315.72 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதற்கு முந்தைய பருவத்தை காட்டிலும் 4.98 லட்சம் டன் அதிகம் ஆகும்.

உணவு தானியம் (Food Grains)

அரிசி, கோதுமை, சோளம், பருப்பு வகைகள், கடுகு எண்ணெய் வித்துகள் மற்றும் கரும்பு உற்பத்தியில் இந்தியா சாதனை படைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகளுக்கு சாதகமான மத்திய அரசின் கொள்கைகள், விவசாயிகள் கடின உழைப்பு, விஞ்ஞானிகளின் விடா முயற்சி காரணமாக இது சாத்தியமாயிற்று எனக்கூறியுள்ளார்.

சமீபத்திய கணக்கீட்டின்படி, உணவு தானிய உற்பத்தியில் எவ்வளவு உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

  • அரிசி -130.29 மில்லியன் டன்
  • கோதுமை- 106.84 மில்லியன் டன்
  • நவதானியம் -50.90 மில்லியன் டன்
  • சோளம் -33.62 மில்லியன் டன்
  • துவரை -4.34 மில்லியன் டன்
  • பருப்பு வகைகள் -13.75 மில்லியன் டன்
  • எண்ணெய் வித்துகள் -37.70 மில்லியன் டன்
  • கடலை பருப்பு -10.11 மில்லியன் டன்
  • சோயாபீன் - 12.99 மில்லியன் டன்
  • கடுகு -11.75 மில்லியன் டன்
  • கரும்பு - 43.81 மில்லியன் டன்

மேலும் படிக்க

முருங்கை சாகுபடியில் பிசினை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

விவசாயிகள் எதிர்பார்ப்பு: சம்பா சிவப்பு மிளகாய் புவிசார் குறியீடு கிடைக்குமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)