பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நல்ல செய்தி இந்திய வாகன துறையை மேலும் ஊக்கப்படுத்தி உள்ளது. ஐரோப்பிய வாகன மையமான ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி மீண்டும் 4வது பெரிய வாகன விற்பனை சந்தையாக (largest automotive market) இந்தியா மாறியுள்ளது என்பது தான் அந்த நல்ல செய்தி.
கோவிட்-19 தொற்று உலகளாவிய வாகனத் தொழிலை பாதித்துள்ள போதும், உலகளாவிய வாகன விற்பனை தரவுகளை வைத்து பார்க்கும் போது, இந்தியா மீண்டும் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி நான்காவது பெரிய வாகன சந்தையாக மாறி இருப்பது இந்திய வாகன உற்பத்தியாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. OICA-ன் ( Organisation Internationale des Constructeurs d’Automobiles) மிக சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, இந்தியா கடந்த 2021-ல் சுமார் 3,759,398 வாகனங்களை விற்றுள்ளது.
இதே ஆண்டில் ஜெர்மனி சுமார் 2,973,319 வாகனங்களை மட்டுமே விற்றுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே ஏறக்குறைய 26 சதவீத வித்தியாசத்தை வெளிப்படுத்துகிறது. OICA என்பது 39 தேசிய வாகன தொழில் வர்த்தக சங்கங்கள் இணைந்து உருவாக்கப்பட்ட சர்வதேச வர்த்தக சங்கம் ஆகும்.
முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டிலும் இந்தியா மிகப்பெரிய கார் விற்பனை சந்தை பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது. மேலும் 2025-ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது, 2021- ல் 4,448,340 யூனிட்களை விற்பனை செய்த ஜப்பான் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்து இந்திய வாகனச் சந்தை மூன்றாவது இடத்தை அடைவதற்கான சாத்திய கூறுகளை கொண்டுள்ளது. ஆனால் அதற்கு 2021-ல் 4,448,340 யூனிட்களை விற்ற ஜப்பானை இந்தியா விஞ்ச வேண்டும்.
personal mobility space 1,000-க்கு சுமார் 33 வாகனங்கள் ஆகும், இது வளர்ந்த சந்தையுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவான ஒன்றாக இருக்கிறது. முதலிடத்தை சீனா தக்க வைத்துக் கொண்டுள்ளது, இருப்பினும் ஆட்டோமொபைல் விற்பனை தேக்கநிலையில் இருந்தது. அமெரிக்காவும் 4% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மூன்றாவதாக 2020 மற்றும் 2019 ஆகிய இரண்டையும் ஒப்பிடுகையில் ஜப்பான் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
CRISIL-ன் சமீபத்திய அறிக்கையின் படி, இந்திய பயணிகள் வாகனத் துறையிலும் ஒரு மாற்றம் நிகழ்ந்து வருகிறது. பிரீமியம் வாகனப் பிரிவில் (ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான விலையுள்ள கார்கள்) வளர்ச்சி என்ட்ரி-லெவல் செக்மென்டை விட வேகமாக உள்ளது.
மேலும் படிக்க