பால் உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில், உலகளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக மத்திய கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
பால் உற்பத்தி (Milk Production)
உலகின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் இந்தியாவுக்கு மட்டும் 23% பங்கு இருப்பதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் வாயிலாக தெரிகிறது. 1950-51ஆம் ஆண்டில் இந்தியாவின் பால் உற்பத்தி 17 மில்லியன் டன் மட்டுமே. 2020-21ஆம் ஆண்டில் இந்தியாவின் பால் உற்பத்தி 209.96 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
2020-21ஆம் ஆண்டு தகவல்படி இந்தியாவில் ஒரு நபருக்கு தினமும் 427 கிராம் பால் கையிருப்பில் இருந்துள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முட்டை உற்பத்தியும் 2019-20ஆம் ஆண்டில் 114383 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மீன் உற்பத்தி 2019-20ஆம் ஆண்டில் 14070 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க
தோட்டக்கலை துறைக்கு மாறும் தென்னை சாகுபடி: விவசாயிகள் எதிர்ப்பு!
குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க சொந்த நிலத்தை தானமாக வழங்கிய தம்பதியர்!