பத்திரிக்கை சுதந்திரத்தை ஆதரிக்கும் 60 நாடுகளில் உள்ள 5,000-க்கும் மேற்பட்டவர்கள் சர்வதேச விவசாய பத்திரிகையாளர் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வரும் நிலையில் 61-வது உறுப்பினர் நாடாக இந்தியா இணைந்துள்ளது. இந்தியாவினை பிரகனப்படுத்தும் அமைப்பாக AJAI தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 24, 2023 அன்று தொடங்கிய IFAJ மாஸ்டர் கிளாஸ் மற்றும் யங் லீடர்ஸ் ப்ரிலிமினரி புரோகிராம் ஜூலை 3, 2023 வரை தொடர்ந்து நடைப்பெறுகிறது. இந்த நிகழ்வில் வொர்க்ஷாப் டே, டூர் டே மற்றும் உறுப்பினர்களுக்கான சந்திப்பு கூட்டம் ஆகிய நிகழ்வுகளும் அடங்கும்.
இந்நிலையில் இன்று கனடாவில் IFAJ - உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் IFAJ கூட்டமைப்பின் 61-வது உறுப்பினர் நாடாக இந்தியா இணைந்துள்ளது. இந்தியாவின் சார்பில் AJAI (Agricultural Journalists Association of India) பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் IFAJ குழுவால் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவும், IFAJ கூட்டமைப்பில் ஒரு அங்கமாக மாறியுள்ளது.
AJAI அமைப்பின் நிறுவனர், எம்.சி.டொம்னிக் இந்தியாவின் கொடியினை Elaine Shein-யிடம் பகிர்ந்து இந்தியாவும் IFAJ -ல் அங்கமானதை மகிழ்ச்சியுடன் குழுமியிருந்த உறுப்பினர்கள் மத்தியில் தெரியப்படுத்தினர்.
IFAJ என்ன செய்கிறது?
விவசாயம் என்பது உலகின் மிகவும் பழமையான தொழில் என்று கூறுவதைக் காட்டிலும் அதுவும் நமது வாழ்வு முறைகளில் ஒன்றாகும். மனிதனின் அடிப்படை உணவுத் தேவைக்கு ஆதாரமாக விளங்குவது வேளாண் தொழில் தான். உலகிலுள்ள ஒட்டுமொத்த மக்களின் உணவுத் தேவையினை பூர்த்தி செய்வதில் விவசாயிகள் பெரும் பங்காற்றுக்கின்றனர். ஆனால், சமீப காலமாக அவர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் மிக ஏராளம். வேளாண் துறையிலுள்ள பிரச்சினைகள் உட்பட, விவசாயத் தொழிலுடன் தொடர்புடைய புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல்களைப் பகிர்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர் IFAJ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தொடர்பாளர்கள்.
IFAJ என்பது அரசியல் ரீதியாக நடுநிலையான, இலாப நோக்கமற்ற கூட்டமைப்பாகும். ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்கா வரை, ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை, IFAJ-ல் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் நோக்கமானது அந்தந்தப் பகுதியில் நிலவும் விவசாய சிக்கல்கள், புதிய வேளாண் நடைமுறைகளை உலகம் முழுவதும் கொண்டு சொல்ல வேண்டும் என்பது தான்.
இதில் பத்திரிகையாளர்கள், ஊடக ஆசிரியர்கள், புகைப்படக் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் ஊடகத் தொடர்பாளர்கள் பலரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவும் தற்போது IFAJ -ல் ஒரு உறுப்பினராக அங்கம் வகிக்கும் நிலையில் நமது நாட்டிலுள்ள விவசாயிகள் மேற்கொள்ளும் வேளாண் நடைமுறைகள், விவசாய பிரச்சினைகள், புதிய வேளாண் தொழில் நுட்பங்கள் இனி உலகம் முழுவதுமுள்ள அனைவரின் பார்வையும் ஈர்க்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.
மேலும் காண்க:
கனடாவில் IFAJ சார்பில் மாஸ்டர் கிளாஸ் மற்றும் யங் லீடர் 2023 நிகழ்வு