கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் உலகத்திற்கே இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நேற்று, டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடந்த சீக்கிய குழுவினர் கூட்டத்தில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது, ' உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களை நான் சந்திப்பதில் பெருமை கொள்கிறேன். கனடா நாட்டின் இந்திய தூதுவர்களாக சீக்கியர்கள் உள்ளனர். சீக்கிய குருக்கள் மக்களுக்காக சேவை செய்வதையே விரும்பினர்.
கொரோனா தடுப்பூசி (Corona Vaccine)
கோவிட் பரவல் நேரத்தில் இந்தியா அதை எப்படி எதிர் கொள்ளப் போகிறது என்று சிலர் நினைத்தனர். ஆனால், கோவிட் தடுப்பூசி செலுத்தியதில் உலகத்திற்கே இந்தியா முன் உதாரணமாக உள்ளது. தொழில் வளர்ச்சியில் இந்தியா உலகிலேயே தனித்துவத்தை பெற்றுள்ளது என பிரதமர் மோடி பேசினார்.
மீண்டும் கொரோனா அதிகரித்துள்ள நிலையில், இரயில் நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோரால் ஏற்படும் கொரோனா தொற்று பாதிப்பை தவிர்க்க சென்னை, திருச்சி, சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட, 50 ரயில்வே ஸ்டேஷன்களில் கொரோனா பரிசோதனை ஒன்றரை ஆண்டாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. பெரும்பாலான மாவட்டங்களில் பாதிப்பு பூஜ்யத்துக்கு வந்ததால், பரிசோதனை நிறுத்தப்பட்டது.
கடந்த வாரம் சென்னை ஐ.ஐ.டி.,யில் 30 பேருக்கு தொற்று உறுதியானது.
13 மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் இவ்விடுதியில் உள்ளனர். தொற்று பரவல் வேகமெடுத்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு மாணவரால் பிறருக்கு தொற்று பரவியுள்ளது. ஆகையால், தடுப்பூசி மற்றும் முகக்கவசம் மட்டுமே நம்மைப் பாதுகாக்கும் என்பதில் ஐயமில்லை.
மேலும் படிக்க
சுற்றுச்சூழலுக்கு ஆதரவான பொருட்கள் வாங்குவதில் இந்தியர்கள் ஆர்வம்!