இந்தியாவில் ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்துவரும் நிலையில், 2027-ஆம் ஆண்டுக்குள், சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என ஐநா., கணித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை, கடந்த1989ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை தினத்தைக் கடைப்பிடித்து வருகிறது.
மக்கள் தொகை தினம் (World Population Day)
அதாவது, கடந்த 1987 ஜூலை மாதம் 11ம் தேதி, உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. இதனை நினைவு கூறும் வகையில், அந்த தேதியை உலக மக்கள் தொகை தினமாக ஐ.நா. அங்கீகரித்துள்ளது.
கடந்த 33 ஆண்டுகளில் அதாவது தற்போது, 2020ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 770 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், உலக நிலப்பரப்பில் வெறும் 2 சதவீத அளவை மட்டுமே கொண்டுள்ள இந்தியா 18 சதவீதத்தை கொண்டுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 139 கோடியாக உள்ளது. அதேநேரத்தில் சீனா 19 சதவீத மக்கள் தொகையை கொண்டுள்ளது.
முதலிடம் பிடிக்க வாய்ப்பு ( First Place)
இதே நிலை தொடரும்பட்சத்தில், அடுத்த 7 ஆண்டுகளில் அதாவது 2027-ம் ஆண்டில் சீனாவை பின்னுக்குத்தள்ளி இந்தியாமக்கள் தொகையில் முதலிடம் பிடிக்கும் என்றும் ஐ.நா கணிக்கப்பட்டுள்ளது.
970 கோடியை எட்டும் (970 Crore)
மேலும் உலக மக்கள் தொகை, வரும் 2050ம் ஆண்டு 970 கோடியையும், 2100ல் 1,100 கோடியையும் எட்டும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன காரணம்?
பெரும்பாலான குடும்பக் கட்டுப்பாடு முறைகள் குடும்பக் கட்டுப்பாட்டின் பொறுப்பை பெண்கள் மீது சுமத்துகின்றன. சக்தி சமன்பாடுகளைப் பொறுத்தவரை, ஆண்களுக்கு அதிகமான குடும்பக் கட்டுப்பாடு முறைகள் இல்லாதது பெண்களுக்கு பாதகமான சூழ்நிலை உருவாக்குகிறது.
குடும்பக் கட்டுப்பாடு என்பது மனைவியின் பொறுப்பு அல்லது சுமை எனக் கருதப்படுகிறது. குடும்ப அளவு கட்டுப்படுத்தப்படுவதை உறுதி செய்வதில் கணவருக்கும் சமமான பொறுப்பு உள்ளது.
இந்திய ஆண்கள் ஆணுறைகளைப் பயன்படுத்தத் தயங்குவது மட்டுமல்லாமல், கருத்தடைக்குச் செல்வதில் அதிகம் தயக்கம் காட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள். இது குடும்பக் கட்டுப்பாட்டிற்கு மட்டுமல்லாமல், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக்கும் மிகவும் பயனுள்ள முறையாகும்.
கருத்தடை செய்துகொள்ள பெரும்பாலான ஆண்கள் முன்வராமல், கருத்தடைக்கான பொறுப்பை மனைவிக்கு பாரமாக மாற்றிவிடுகிறார்கள்.
எனவே நாட்டிக் மக்கள்தொகையைக் கருத்தில்கொண்டு, அளவான குடும்பத்தை உருவாக்க ஆண்கள் முன்வரவேண்டியது அவசியம்.
மேலும் படிக்க...
சானிடைசர் உபயோகிப்பவரா நீங்கள்? சில விஷயங்களைக் கடைப்பிடிக்காவிட்டால் விளைவுகள் விபரீதம்
நொறுக்குத் தீனிப் பிரியரா நீங்கள்? தவிர்க்க சில வழிகள்
=========