இந்திய விமானப்படையின் 89வது ஆண்டு தினத்தை (Indian Air Force Day) முன்னிட்டு, காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானபடை தளத்தில் நேற்று (அக்டோபர் 8), விமானப்படை வீரர்கள் சாகசம் செய்தனர். அதில், சுகோய் -30 மற்றும் ரபேல் விமானங்களும் வானில் பறந்தன. பிரதமர் மோடி (PM Modi) வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
ஏஎன் 32 போர் விமானம் மூலம் ஆகாஷ் கங்கா அணியினர் சாகசம் நிகழ்த்தி விழாவை துவக்கி வைத்தனர். இந்த விழாவில், பாரம்பரிய, நவீன மற்றும் முக்கிய போர் விமானங்கள் இந்த விழாவில் பங்கேற்றன.
முப்படை தலைமை தளபதி
இந்த நிகழ்ச்சியில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி விஆர் சவுதரி, ராணுவ தளபதி நரவானே, கடற்படை தளபதி கரம்பீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் வாழ்த்து
விமானப்படை தினத்தை முன்னிட்டு டுவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தி: விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். இந்திய விமானப்படை தைரியம், விடா முயற்சி போற்றுதலுக்குரியது. நாட்டை பாதுகாப்பதிலும், சவாலான நேரங்களில் அவர்களின் மனிதாபிமான உணர்வுகளுடன் சிறப்பாக செயல்பட்டு அவர்கள் தங்களை வேறுபடுத்தி கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க
குப்பையில்லாத நகரங்களே தூய்மை இந்தியாவின் இலக்கு! பிரதமர் பேச்சு!
முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: தங்க முதலீடு தரும் புதிய பலன்!