News

Tuesday, 22 October 2019 11:04 AM

தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இன்னும் 3 நாட்களில் தாழ்வு மண்டலமாக வலு பெறும்.

காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை போன்ற மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், மற்ற மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், மதுரை, தேனி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே போன்று புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கும் மழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கேரள மாநிலத்திலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் இங்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, திரிசூர், பாலக்காடு போன்ற மாவட்டங்களுக்கு நேற்று மாலை முதல் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர், காசர்காடு உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டமான தேனியில்,  மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடுகளை எடுத்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப் பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள், கிராமங்களிலே தங்கி அனைத்தையும் கண்காணிக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளனர். பொதுமக்கள் உதவிக்கு 1077,1070 என்ற கட்டணமில்லா எண்ணில் 24மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)