மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 June, 2019 1:42 PM IST

மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மோட்டார் வாகன விதிமுறைகளை கடுமையாக்குவதன் மூலம், விபத்துகளை கணிசமாக குறைகலாம்.

தற்போது அமுலில் உள்ள வாகன சட்டத்தில் அவ்வப்போது மத்திய அரசு திருத்தங்களை அறிமுக படுத்தி வருகிறது. முந்தைய ஆட்சியில் இதற்கான மசோதா கொண்டு வர பட்டு விவாதிக்க பட்டது. மாநிலங்களவையில் போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் அம்மசோதா காலாவதியாகி விட்டது.

புதிய மசோதாவில் மீண்டும் மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்களை செய்து மாநிலங்களவையில் விவாதிக்க பட உள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் மக்களவையில் விவாதிக்க பட்டு பின் அமுல்படுத்த படும் என கூறியுள்ளது     

புதிய மசோதாவில் சாலை, வாகன விதிகளை மீறுவோருக்கு அபராதம், தண்டனைகளை அதிக படுத்தியள்ளது. இதில் ஒவ்வொரு விதி மீறலுக்கும் தனித்தனி அபராதங்கள் விதிக்க உள்ளது அதன் படி  விவரங்கள் பின் வருமாறு

  1. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு ரூ 25,000 அபராதம், மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை
  2. தலை கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ 100 முதல் ரூ 1000 வரை அபராதம் மற்றும் 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து.
  3. சீட் பெல்ட் போடாமல் செல்பவர்களுக்கு ரூ 100 முதல் ரூ 1000 வரை அபராதம் வசூலிக்க படும்
  4. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ 5000 வரை அபராதம். ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டவர்கள், அதை மீறி வாகனம் ஓட்டினால் ரூ 500 இல் இருந்து ரூ 10000 வரை வசூலிக்க படும்.
  5. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ 10000 வரை அபராதம்.
  6. வாகன பந்தயதில் ஈடுபடுவோருக்கு ரூ 5000 வரை அபராதம்.
  7. குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக பளு ஏற்றி சென்றால் டன்னுக்கு தலா ரூ 2000 வரை வசூலிக்க படும்.

விரைவில் இந்த புதிய வாகன சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையிலும், மக்களவையில்  தாக்கல் செய்ய உள்ளது.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Indian Motor Vehicle Act Doing Changes In The Rules: Students Riding Vehicle Is Punishable
Published on: 27 June 2019, 01:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now