இஸ்ரோ தற்பொழுது விண்வெளி சார்ந்த பல்வேறு ஆய்வுகளை செயல்படுத்தி வருகிறது. இதனிடையே கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இஸ்ரோ ஆராய்ச்சியாளர் சிவன் பல முக்கிய கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
அவர் தெரிவித்ததாவது, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக விண்வெளி துறையில் இந்தியாவும் தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளைச் செய்து வருகிறது. இன்று உலக நாடுகள் கூட தங்கள் சாட்டிலைட்களை இஸ்ரோ மூலமே செலுத்துகிறது. அந்தளவுக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது. இத்துடன் நில்லாமல் தொடர்ந்து பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும் கூட இஸ்ரோ நிறுவம் ஆய்வு செய்துக்கொண்டு வருகிறது, என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரோ முன்ளான் தலைவர் சிவன், "பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வரும் முயற்சியால் இந்தியாவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பிரதமரின் நடவடிக்கைகளால் பல்வேறு துறைகளில் நாடு வேகமாக முன்னேறி வருகிறது. கல்வி- ஸ்டார்ட்அப்-தொழில் சூழல் அமைப்பை துடிப்பானதாக மாற்ற மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. இது தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் தொழில்முனைவோராக மாற வேண்டும்.. மாணவர்கள் விண்வெளி துறையில் கால் பதிக்க வேண்டும்.
ககன்யான் திட்டம்
இஸ்ரோ தற்பொழுது பல திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்று மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்.அதில் நிறுவனம் தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. மனிதர்களை ஏழு நாட்கள் விண்வெளிக்கு அனுப்பி, அவர்கள் அங்கேயே தங்கி சோதனை செய்து. பின்னர் பூமிக்கு அழைத்து வரும் திட்டம்தான் ககன்யான். அதற்கான தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை நாம் சாட்டிலைட்களை மட்டுமே விண்வெளிக்கு அனுப்பி வந்தோம் என்பது குறிப்பிடத்தக்க்கது. முதல்முறையாக இப்பொழுது மனிதர்களை அனுப்ப உள்ளோம்.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு பல கட்டுப்பாடுகள் தேவைபடுகின்றன. அதிநவீன தொழில்நுட்பங்கள், மனிதர்களை பாதுகாப்பாக விண்வெளிக்கு அனுப்பு தனியாக ராக்கெட், ஆகியன தேவைப்படுகின்றன அதை உருவாக்கும் பணிகள் தற்போது முடிவடைந்து விட்டன. மேலும், அங்கு விண்வெளியில் இருக்கும் வீரர்களுக்கு பூமியில் இருப்பது போன்ற சீதோஷன நிலையையும் நாம் ஏற்படுத்த வேண்டும். இதுபோன்று விண்வெளிக்கு செல்வது என்பது இகவும் சவாலான ஒன்று.
குறிப்பாக அவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்பும் போது, உச்சபட்ச வெப்பத்தை தாங்கும் தொழில்நுட்பம் நமக்கு மிகவும் அவசியம். மற்றும், அவர்கள் பாதுகாப்பான இடத்தில் தரையிறங்க வேண்டும். இதற்காக பலதரப்பட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. சோதனை அனைத்தும் முடிந்தவுடன். மனிதர்கள் இல்லாமல், முதலில் ரோபோக்களை விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்வார்கள். அதில் இருந்து கிடைக்கும் டேட்டாக்களை ஆராய்ந்து பாதுகாப்பு உறுதி செய்தவுடன் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவார்கள்" என்றார்.
இதையடுத்து சந்திராயன் 2 சம்மந்தமான கேள்விக்கு பதிலளித்த அவர், "சந்திராயனில் இருக்கும் விண்கலம் இன்னுமே நிலவை சுற்றி ஆய்வு செய்து வருகிறது. நிலவில் இறங்கிய லேண்டர் விண்கலம் செயல்திறன் இழந்துவிட்ட போதிலும், அது நமக்கு பல தகவல்களை அனுப்பியுள்ளது. அதில் இருந்து கிடைத்த டேட்டாக்களின் அடிப்படையில் இப்போது ஆய்வு செய்து வருகிறார்கள்" என்ரூ அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்படிக்க
குஜராத்தில் பணமழை பொழிந்தது! அம்புட்டும் 500 ருபாய்!
என்னங்க சொல்றீங்க..24 வருஷமா தேங்காயை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்கிறாரா?