பாரா ஒலிம்பிக் பாட்மின்டனில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என சாதனை படைத்தார் பிரமோத் பஹத்.
ஜப்பானின் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 16 வது பாரா ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் எஸ்.எல்., 3 பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரமோத் பஹத், ஜப்பானின் தய்சுகேவை சந்தித்தார். இதில் 21-11, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் மனோஜ் சர்கார், பிரிட்டனின் டேனியலிடம் 8-21, 10-21 என எளிதாக வீழ்ந்தார்.
பிரமோத் பிரமாதம்
பைனலில் பிரமோத், டேனியல் மோதினர். முதல் செட்டில் 2-5 என பின்தங்கிய பிரமோத், பின் சிறப்பாக செயல்பட 21-14 என வென்றார். அடுத்து நடந்த இரண்டாவது செட்டில் பிரமோத் 3-11 என பின்தங்கினார். இதன் பின் எழுச்சி பெற்ற பிரமோத் அடுத்தடுத்து புள்ளிகள் குவித்தார். கடைசியில் டேனியலை முந்திய பிரமோத், இரண்டாவது செட்டை 21-17 என கைப்பற்றினார். 45 நிமிட போராடத்தின் முடிவில் 21-14, 21-17 என வென்ற பிரமோத், பாரா ஒலிம்பிக் பாட்மின்டனில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார்.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மனோஜ்-தய்சுகே மோதினர். முதல் செட்டை மனோஜ் 22-20 என போராடி வென்றார். அடுத்த செட்டை 21-13 என எளிதாக வசப்படுத்தினார். 47 நிமிட போட்டியில் முடிவில் 22-20, 21-13 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்ற மனோஜ், வெண்கலப்பதக்கம் கைப்பற்றினார்.
ஒட்டுமொத்தமாக இந்தியா 4 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் பட்டியலில் 25 வது இடத்துக்கு முன்னேறியது.
மேலும் படிக்க
பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல்: வெள்ளி வென்றார் தமிழக வீரர் மாரியப்பன்!
பாராலிம்பிக் வில்வித்தையில் வெண்கலம்; உயரம் தாண்டுதலில் வெள்ளி!