நடப்பு நிதியாண்டின் முடிவடைந்த முதல் காலாண்டில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 15 சதவீதம் உயர்ந்து 1.99 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மீன் ஏற்றுமதி (Fish Export)
கடல் உணவுகள் ஏற்றுமதி குறித்து, கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (MPEDA) தலைவர் KN ராகவன் கூறியதாவது "2021-22 ஆம் ஆண்டில், கடல் உணவுகளின் மொத்த ஏற்றுமதியானது 7.76 பில்லியனாக இருந்துள்ளதாகவும், இந்த வளர்ச்சியானது கடந்த நிதியாண்டு 2021-ஐ விட 30 சதவீதம் அதிகமாகும்" என்று கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட சில தடைகளை தளர்த்துவதன் மூலம், வரும் ஆண்டுகளில் ஐரோப்பாவிற்குக் கடல் உணவு ஏற்றுமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அந்த அதிகாரி கூறினார்.
இந்திய அரசு நேரடி தலையீடு மற்றும் பேச்சுவார்த்தை மூலம் ஐரோப்பா ஏற்றுமதி பிரச்சனையைச் சமாளிக்கப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜக்தீஷ் ஃபோபாண்டி கூறினார்.
மேலும் படிக்க