News

Saturday, 04 March 2023 10:20 AM , by: R. Balakrishnan

Ration card

நீங்களும் அரசின் இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரேஷன் வாங்குபவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தகுதியற்ற ரேஷன் கார்டுதாரர்களுக்கு எதிராக அரசு சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் கீழ் ஹரியானா அரசு கடந்த காலங்களில் 9 லட்சம் ரேஷன் கார்டுகளை ரத்து செய்துள்ளது.

ரேஷன் கார்டு (Ration Card)

ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தகவல் தெரிவித்துள்ளார். அதே சமயம் 12 லட்சம் புதிய ரேஷன் கார்டுகளும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்ட மக்களில், 3 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் ஆவர். அதேபோல, சுமார் 80,000 பேர் அரசு ஊழியர்கள்.

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. இது தவிர, பல மாநில அரசுகளும் ஏழைகளுக்கு ரேஷன் வழங்கி வருகின்றன.

ரேஷன் வழங்க, ரேஷன் கார்டுதாரர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். தகுதியில்லாதவர்கள் கூட இலவச ரேஷனைப் பயன்படுத்திக் கொள்வதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், அரசு தகுதியற்றவர்களின் கார்டுகளை நீக்கத் தொடங்கியுள்ளது. மேலும் அவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டும் வருகின்றன.

மேலும் படிக்க

மதுரை விவசாயிகளிடம் கொள்ளையடிக்கும் நெல் கொள்முதல் மையங்கள்: கண்டு கொள்ளாத அரசு!

காப்பீடு விதிமுறைகளில் மாற்றம்: பாலிசிதாரர்களே கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)