சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் ரஜினிகாந்திடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்தார்.
திடீர் உடல்நலக்குறைவு (Sudden malaise)
தாதா சாஹிப் பால்கே விருது பெற்றுவிட்டுச் சென்னைத் திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தலைவலி மற்றும் லேசான மயக்கம் காரணமாக பாதிக்கப்பட்டதால்,கடந்த 28ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரஜினி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் உடல் முழு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ரத்தக்குழாயில் அடைப்பு (Occlusion of a blood vessel)
அதில், நடிகர் ரஜினிகாந்துக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் சிறிய அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அதை நீக்குவதற்கான முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் காலை தீவிர சிகிச்சை மூலம் அடைப்பு சரிசெய்யப்பட்டது.
தொடர் சிகிச்சையால் அவரது உடல் நலம் தற்போது தேறிவருவதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
முதல்வர் வருகை (CM Visit)
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்று, சிகிச்சை பெற்று வரும் ரஜினியிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும், மருத்துவமனை மருத்துவர்களிடம் ரஜினிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.
அண்ணாத்த
ரஜினி நடத்த அண்ணாத்த படம் வரும் 4ம் தேதி தீபாவளி அன்று திரைக்கு வரஉள்ளது. இதனை ரஜினி தியேட்டர்க்கு சென்று ரசிகர்களுடன் சேர்த்து பார்ப்பார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
ரஜினிகாந்த்துக்கு இன்பார்க்ட் பாதிப்பு - மருத்துவமனையில் சிகிச்சை
ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது- 25ம் தேதி வழங்கப்படுகிறது!