News

Wednesday, 20 July 2022 09:06 AM , by: R. Balakrishnan

Train

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர். அப்படி பயணம் செய்பவர்கள் தட்கல் முறையிலாவது டிக்கெட் முன்பதிவு செய்து எப்படியாவது ரயிலில் சென்று விட வேண்டும் என்று நினைக்கின்றனர். ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பாக அதில் உள்ள விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் சலுகைகள் உள்ளிட்ட அனைத்தையும் பயணிகள் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

ரயில் பயணம் (Train Travel)

IRCTC செயலி அல்லது இணையதளம் மூலமாக பெரும்பாலானோர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். எனவே அதில் உள்ள விதிமுறைகள் குறித்து தெரிந்து கொள்வது நல்லது. ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஒரு சில சமயங்களில் பல காரணங்களால் டிக்கெட் கேன்சல் ஆகிவிடும். அதற்கான ரீபண்ட் தொகையை ஐஆர்சிடிசி உங்களுக்கு வழங்கும். ஆனால் அது கையில் வந்து சேர சில நாட்கள் ஆகும்.

ரீபண்ட் விஷயத்தில் ஐஆர்சிடிசி முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது ரீபண்ட் கொடுப்பதற்காக தனியாக ஒரு பேமெண்ட் கேட்டு அமைப்பை உருவாக்கியுள்ளது. அதன் மூலமாக பரிவர்த்தனைகள் மிக வேகமாக நடைபெறும். வாடிக்கையாளர்களுக்கு ரீபண்ட் தொகை இதன் மூலமாக விரைவில் வழங்க முடியும்.

இந்த புதிய வசதியால் டிக்கெட் தொகை உடனடியாக கிடைக்கும் என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்யும்போது வெயிட்டிங் லிஸ்ட் இருந்து சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு உங்களது டிக்கெட் கேன்சல் ஆகிவிடும். அப்போது உங்களுக்கான ரீபண்ட் தொகை மிக விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது டிக்கெட் ரீபண்ட் தொகை சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்களில் பயணிகளுக்கு கிடைத்து விடும். இந்த வசதியால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க

10 மாதக் குழந்தைக்கு ரயில்வே வேலை: வரலாற்றில் இதுவே முதன்முறை!

சாலை விபத்துகளை தடுக்க புதிய டெக்னாலஜி அறிமுகம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)