தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார் நிலை உணவுகள் எனப்படும் இன்ஸ்ட்டன்ட் உணவுகள் தயாரிப்பது குறித்து 2 நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.
வேளாண் படிப்பு (Agricultural Studies)
கோவையில் இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் குறித்து மாணவர்களுக்குக் கற்பிப்பதுடன், விவசாயிகளுக்கும் விவசாயம் சார்ந்த பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும் பணியையும் செய்து வருகிறது.
தொழில்முனைவோராக மாற (Become an Entrepreneur)
விவசாயிகளுக்குச் சான்று பெற்ற பயிர் ரகங்களை அறிமுகப்படுத்துவதுடன், அவற்றில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, சாகுபடித் தொழில்நுட்பம், அதிக மகசூலுக்கான சூட்சமம் என விவசாயத்திற்கு இன்றியமையாத விஷயங்களையும் வேளாண் பல்கலைக்கழகம் கற்றுக்கொடுத்து வருகிறது.
பயிற்சி முகாம் (Training camp)
அதேநேரத்தில் தொழில் முனைவோராக மாற வேண்டும் என நினைப்பவர்களுக்கும் ஆலோசனை வழங்குவதிலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பணி மகத்தானது. அந்த வகையில் ரெடிமேட் உணவுகள் என அழைக்கப்படும் 'தயார் நிலை உணவுகள் தயாரித்தல் பற்றிய 2 நாள் பயிற்சி நடத்தப்பட உள்ளது.
23 மற்றும் 24ம் தேதி (23rd and 24th)
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள பயிற்சி அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் சார்பில் வரும் 23.11.2021 மற்றும் 24.11.2021 தேதிகளில் இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயிற்சியின் போது கீழ்க்காணும் உணவு பொருட்களான,
-
ஹெல்த் மிக்ஸ்
-
தோசை மிக்ஸ்
-
ஹல்வா மிக்ஸ்
-
கீர் மிக்ஸ்
-
குளோப் ஜாமூன் மிக்ஸ்
-
அடை மிக்ஸ்
-
டே க்ளா மிக்ஸ்
-
பிசிபெலா பாத் மிக்ஸ்
-
சூப் மிக்ஸ்
-
அல்ட்ரா ஹல்வா மிக்ஸ்
-
கீர் மிக்ஸ்
-
ஐஸ் கீரிம் மிக்ஸ்
-
தக்காளி சாதம் மிக்ஸ்
ஆகியவை எளிய முறையில் தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் மற்றும் ஏனைய ஆர்வலர்கள் ரூ.1,500 + 18% GST ரூ.1770/- முதல் நாளன்று செலுத்தி பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
தொடர்புக்கு (Contact)
மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் - 641 003 என்ற முகவரியிலும், 0422 - 6611268 என்றத் தொலைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
மழையால் பாதித்த பயிர்கள்: கணக்கெடுக்கும் பணி துவக்கம்!
ஓராண்டை நெருங்கும் விவசாயிகளின் போராட்டம்: நாடாளுமன்றம் நோக்கி பேரணி!