தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU)சார்பில் பட்டியல் இன விவசாயிகளுக்கு வேளாண்பயிர்களில் ஒருங்கிணைந்த களை மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
களை மேலாண்மை (Weed Management)
கோயமுத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TamilNadu Agricultural University) உளவியல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அகில இந்திய களை மேலாண்மை ஆராய்ச்சி திட்டத்தின் மூலம் இந்தப் பயிற்சி, உடுமலைப்பேட்டையில் வழங்கப்பட்டது.
இத்திட்டமானது, பட்டியல் இன வகுப்பு விவசாயிகளுக்கு, களை மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதற்கு தகுந்த இடுபொருள்களை இலவசமாக கொடுக்கவும் தேவையான நிதி உதவியை, களை ஆராய்ச்சி இயக்கு நரகம் ஜபல்பூர் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்திடமிருந்து பெறப்பட்டது.
உளவியல் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர். இரா. சின்னமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில், நடத்தி வேளாண்மைப் பயிர்களில் களைச்செடிகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் களைக்கொல்லிகள் பற்றிய விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டன. மேலும், வேளாண் பெருமக்களுக்கு தேவையான இடுபொருட்களும் வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில், களை மேலாண்மைத் திட்டத்தின் இணைப் பேராசிரியர் மற்றும் முதன்மை விஞ்ஞானி முனைவர் மா. முரளி அர்த்தனாரி, களைக்கொல்லிகளை எவ்வாறு, எந்த அளவு மற்றும் என்னென்ன களைக்கொல்லிகளை, எந்தெந்த பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.
மேலும் படிக்க...
வாழையின் விலை வழக்கத்தைப் போல நிலையாக இருக்கும்- TNAUவின் கணிப்பு!
மிளகாய் வற்றலுக்கு ரூ.9000/- வரை கிடைக்கும்- TNAUவின் விலை முன்னறிவிப்பு!