தமிழகத்தில் நேற்று மாலை வரை 14 நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகியுள்ளது. அதிக வெப்பச்சலனம் காரணமாக தவித்த மக்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தென்மேற்கு பருவ காற்று தீவிரமடைந்து வருகிறது, இதனால் ஜூலை 6 நாளை முதல் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நேற்று மாலை வரை பதிவான வெப்பநிலை அளவின் படி 14 நகரங்களில் 100 டிகிரிக்கு அதிகமாக வெயில் பதிவாகியுள்ளது. திருத்தணியில் 105 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், சென்னை விமான நிலையம், மதுரை தெற்கு, மதுரை விமான நிலையம், கடலூர் ஆகிய இடங்களில் 104 டிகிரி, வேலூர், புதுச்சேரி இடங்களில் 102 டிகிரி, காரைக்கால், கரூர் பரமத்தி, பாளையங்கோட்டை, நாகப்பட்டினம், ஆகிய இடங்களில் 100 டிகிரியும் பதிவாகியுள்ளது.
இதை அடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலப்பகுதியை சென்றடைந்து வலுவிழந்து வருகிறது. இதன் காரணமாக தென்மேற்கு பருவ காற்று தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் நாளை முதல் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் குறிப்பாக கோவை, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, விருதுநகர், நாகப்பட்டினம், தேனி, நெல்லை, ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
K.Sakthipriya
Krishi Jagran