10 மாநிலங்களில் 4 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பகுதியில் ஜூலை 3-வது வாரம் வரை பாலைவன வெட்டுக்கிளிகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தனது கோரத் தாண்டவத்தை ஆடி வருகிறது.
இவற்றுக்கு மத்தியில், வட மாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகள் (Locusts) விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன.
பயிர்கள்நாசம்
ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த பாலைவன வெட்டுக்கிளிகள் முதற்கட்டமாக ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்திர பிரதேம் உள்ளிட்ட வட மாநிலங்களில் விளைநிலங்களை நாசம் செய்தன. இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் தான் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது. இவற்றைக் கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகளும், மத்திய அரசும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன்படி மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், ஹரியானா மாநிலங்களில், கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் ஜூலை 23 வரையிலான காலத்தில் 2,02,565 ஹெக்டேர் பரப்பில் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை, வெட்டுக்கிளிக் கட்டுப்படுத்தல் வட்டார அலுவலகங்கள் மேற்கொண்டுள்ளன.
இதேபோல், ஜூலை 23ஆம் தேதி வரையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் பிகார் மாநில அரசுகள் மூலம் 1,98,65 ஹெக்டேர் பரப்பில் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பிகார் மற்றும் ஹரியானா மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் பயிர்கள் இழப்பு ஏற்பட்டதாகத் தகவல் எதுவும் பதிவாகவில்லை.
இருந்தபோதிலும் ராஜஸ்தானில் சில மாவட்டங்களில் குறைந்த அளவில் பயிர்கள் நாசமானதாகத் தகவல்கள் வந்துள்ளன.
எனினும் நேற்று வளர்ச்சி அடையாத இளஞ்சிவப்பு நிற வெட்டுக் கிளிகள் மற்றும் வளர்ந்த மஞ்சள் வெட்டுக்கிளிகள் ராஜஸ்தானில் பார்மர், ஜோத்பூர், பிக்கானிர், சூரு, நாகாவுர், ஸ்ரீகங்காநகர் மற்றும் பரத்பூர் மாவட்டங்களில் அதிகமாகக் காணப்பட்டன.
மேலும் படிக்க...
வெறும் 4 சதவீத வட்டியில் சிறப்பு பயிர் கடன்- வழங்குகிறது எஸ்பிஐ!
ஒரே நேரத்தில் முதிர்ச்சி அடையும் பாசிப்பயிறு கோ-8 ரகம் - வேளாண் பல்கலைக்கழகம் சாதனை!