மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 February, 2021 10:18 PM IST
Credit : Daily Thandhi

பொறையாறு அருகே பனங்கிழங்கு அறுவடை (Harvest) தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே பனை மரங்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பண்டைய காலத்திலிருந்து பனை மரங்கள் (Palm trees) அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தன. இந்த பனை மரங்களில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு, பனங்கிழங்கு போன்றவை உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். மேலும் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரை காய்ச்சி கருப்பட்டி (Palm Jaggery), பனங்கற்கண்டு ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இவை உடலுக்கு வலு சேர்த்து நீண்ட ஆயுள் தரும்.

அறுவடை

நம் முன்னோர்கள் பனை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய பொருட்களை சாப்பிட்டு திடகாத்திரமாக இருந்து உள்ளனர். இவ்வாறு பல்வேறு நன்மைகள் தரக்கூடிய பனை மரங்கள் தற்போது செங்கல் சூளைக்கும், வீடு கட்டவும் பயன்படுத்துவதற்காக அதிக அளவில் வெட்டப்படுகின்றன.

பனை மரங்கள் வெகுவாக குறைந்து வருகிறது. ஆனால், சில இடங்களில் விவசாயிகள், பனை மரத்தால் ஏற்படும் நன்மைகள் (Benefits) கருதி, இந்த மரங்களை பாதுகாத்து வளர்த்து வருகின்றனர். தற்போது பனங்கிழங்கு சீசன் (Palm tuber season) ஆகும். மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே காழியப்பநல்லூர், சிங்கனோடை, பத்துகட்டு உள்ளிட்ட பகுதிகளில் மணற்பாங்கான இடங்களில் விவசாயிகள் பனங்கிழங்கு சாகுபடி (Harvest) செய்தனர். தற்போது பனங்கிழங்கு அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பனங்கிழங்கு சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

நார்சத்து

தற்போது பனங்கிழங்கு சீசன் என்பதால் பனங்கிழங்கை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுகின்றனர். இதுகுறித்து பனங்கிழங்கு சாகுபடி (Harvest) செய்த விவசாயிகள் கூறியதாவது:- பனை மரம் இயற்கை மருத்துவம் (Natural medicine) கொண்ட ஒரு மரமாகும். இந்த மரத்தை தமிழ் மரம் (Tamil Tree) என்றும் கூறுவர். பனங்கிழங்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே விளையும். இதில் நார்சத்து (Fiber), இரும்பு சத்து (Iron) உள்ளது. உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தரும்.

பனை மரங்களை பாதுகாப்போம்

குடல்புண், வயிற்றுப் பூச்சி, மலச்சிக்கல் போன்றவற்றை போக்கும். பனங்கிழங்கை அவித்து சாப்பிடுவார்கள். சிலர் அவித்த பனங்கிழங்கை வெயிலில் காய வைத்து அதை மாவாக்கி காய்ச்சி சாப்பிடுவார்கள். வாய்வு தொல்லை (Gas problem) உள்ளவர்கள் பனங்கிழங்கை மாவாக்கி பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து சாப்பிடுவார்கள். சத்துமிக்க, மருத்துவ குணம் கொண்ட இந்த பனங்கிழங்கை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்றனர். நீண்ட ஆயுள் உள்ள பனை மரங்கள் தற்போது விற்பனைக்காக வெட்டப்படுகிறது. எனவே தமிழக அரசு பனை மரங்களை பாதுகாக்க (Protect) நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என மத்திய அரசு உறுதி!

விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும், வேலூர் கலெக்டர் வலியுறுத்தல்

English Summary: Intensity of palm tuber harvest! Farmers demand to protect palm trees! (1)
Published on: 03 February 2021, 08:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now