இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 17 March, 2022 2:38 PM IST
Interest Offer on Export Credit

குறு, சிறு, நடுத்தர நிறுவன ஏற்றுமதி கடனுக்கான வட்டிச் சலுகைக்கு ‘ஆன்லைன்’ வாயிலாக பதிவு செய்யும் நடைமுறை அறிமுகமாகிறது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதற்கு முன்னரும், ஏற்றுமதி செய்த பின்னரும் வங்கியில் கடன் பெறும் வசதி உள்ளது. இந்நிலையில் சர்வதேச போட்டியை சமாளிப்பதற்காக தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்றுமதிக்கு முன்னரும், ஏற்றுமதிக்கு பின்னரும் வங்கியில் பெறும் கடனுக்கான வட்டி, முறையே 2 சதவீதம் மற்றும் 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

வட்டிச் சலுகைத் திட்டம் (Interest concession scheme)

‘ஐ.இ.எஸ்., எனும் இந்த வட்டிச் சலுகைத் திட்டம், 2024, மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது.இந்நிலையில், இந்த திட்டத்தில் தயாரிப்பு துறையைச் சேர்ந்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஏற்றுமதிக்கான வட்டிச் சலுகை பெற ‘ஆன்லைன்’ பதிவு அறிமுகமாகிறது.

இது குறித்து அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஐ.இ.எஸ்., திட்டத்தில் பயனாளிகளின் தகவல்களை சேமிக்கவும், திட்டச் செயல்பாடுகளை கண்காணிக்கவும், வரும் ஏப்.,1 முதல் ஆன்லைன் பதிவு அறிமுகமாகிறது. வட்டிச் சலுகை பெற விரும்பும் ஏற்றுமதியாளர்கள் அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகத்தின் வலைதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கு ஓராண்டு செல்லுபடியாகும் ‘யு.ஐ.என்.,’ எனும் தனி அடையாள எண் வழங்கப்படும்.

ஏற்றுமதியாளர்கள் இந்த எண்ணை, கடன் விண்ணப்பத்துடன் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை வங்கி பரிசீலித்து குறைந்த வட்டியில் கடன் வழங்கும். வரும், ஏப்ரல் 1க்குப் பின், வலைதளத்தில் பதிவு செய்யும் ஏற்றுமதியாளர்களுக்கு மட்டுமே ஐ.இ.எஸ்., திட்டத்தின் கீழ் வட்டிச் சலுகை கிடைக்கும்.

மேலும் படிக்க

ஃபிக்சட் டெபாசிட் திட்டம்: புதிய விதிமுறையை அறிமுகம் செய்தது ரிசர்வ் வங்கி!

LIC பாலிசிதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மார்ச் 25 வரை கால அவகாசம்!

English Summary: Interest Offer on Export Credit: Introduced Online Registration! (1)
Published on: 17 March 2022, 02:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now