News

Saturday, 29 June 2019 05:11 PM

வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது.  அஞ்சல் அலுவலகம் மற்றும்  மத்திய அரசு இணைத்து வழங்கும் பிபிஎப், கிசான் விகாஸ் பத்ரம், செல்வ மகள் திட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மீதான வட்டி விகிதத்தை வரும் காலாண்டில் குறைத்துள்ளது.

கடந்த  2017-ம் ஆண்டு முதல் மத்திய அரசு சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை அவ்வப்போது மாற்றி அமைகிறது. கடன் பத்திரங்கள், சேமிப்பு திட்டங்களில்  இருந்து பெறப்படும்  வருவாய் போன்றவற்றை பொறுத்து ஒவ்வொரு காலாண்டிற்கும் மாற்றி அமைகிறது.

மாற்றப்பட்ட வட்டி விகிதங்களின் விவரங்கள் பின்வருமாறு

செல்வ மகள் சேமிப்பு திட்டம் என அழைக்கப்படும் மத்திய அரசின் "சுகன்யா சம்ரிதி யோஜனா" திட்டத்தின் வட்டி விகிதமானது 8.5 % லிருந்து 8.4% மாக  குறைக்கப்பட்டுள்ளது. 

ஓர் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை உள்ள சிறு சேமிப்புக்கான வட்டி விகிதத்தை 7.0% லிருந்து 6.9% மாக குறைத்துள்ளது.

 5 ஆண்டுகளுக்கான வட்டி விகிதத்தை 7.8% லிருந்து 7.7% மாக குறைத்துள்ளது. மூத்த குடிமக்களனில் வட்டி விகிதம் 8.7 % லிருந்து 8.6% குறைக்கப்பட்டுள்ளது.

கிசான் விகாஸ் பத்ரா முதலீட்டு திட்டத்தின் வட்டி விகிதம் 7.7% லிருந்து 7.6%   குறைக்கப்பட்டுள்ளது, அது மட்டுமல்லாது திட்டம்  முதிர்வுவடையும்  காலம் 112 லிருந்து 113 ஆக உயர்த்தியுள்ளது.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF)   திட்டம் மீதான வட்டி விகிததினை 8.0% லிருந்து 7.9% குறைத்துள்ளது.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)