News

Friday, 31 May 2019 12:28 PM

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு படிப்பினை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. வரும் கல்வியாண்டில் பிளஸ்2 முடித்த மாணவர்களுக்கு நேரடியாக எம்.ஏ எனும் முதுகலை படிப்பினை வழங்க உள்ளது.

தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய நோக்கம் தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் உருவாக்குவதே ஆகும்.

தமிழின் தொன்மை மற்றும் பண்பாடு சிறப்பு மிக்க ஓலை சுவடிகளை பாதுகாக்கும் பொருட்டு பெரும் செலவில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையம் ஒன்றினை நவீன வசதிகளுடன் அமைத்திருக்கிறது. 

தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல் பட்டு வரும் தன்னாட்சி நிறுவனம் ஆகும். இங்கு கல்வெட்டு, தொல்லியல், அகழாய்வு எனும் தனித்துவமான பிரிவுகள் உள்ளன.

தகவல் கூடங்கள் மற்றும் நூலகம்

  • இலக்கண அறிவை பெற "தொல்காப்பிய ஆய்வர் கூடம்".
  • பழந்தமிழரின் வாழ்வியலை அறிய "பழந்தமிழரின் வாழ்வியல் காட்சி கூடம்".
  • திருக்குறளின் சிறப்பினை விவரிக்கும் “திருக்குறள் ஓவிய காட்சி கூடம்”.
  • மொழியின் தொன்மையினை அறிய “மொழியில் ஆய்வு கூடம்”.
  • 2 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களை உள்ளடக்கிய நூலகம்.

ஒருங்கிணைத்த முதுகலை படிப்பு

2019-2020 ஆம் கல்வி ஆண்டிற்கான ஒருங்கிணைத்த முதுகலை பட்டபடிப்பினை அறிமுக படுத்தியுள்ளது.  இதன் மூலம் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இப்பிரிவில் நேரடியாக சேரலாம். ஐந்தாண்டு படிப்பின் இறுதியில் மாணவர்களுக்கு தமிழ் இலக்கியம் எம்.ஏ  எனும் பட்டம் வழங்கப்படும்.

விண்ணப்பம் மற்றும் நுழைவு தேர்வு

விண்ணப்பங்களை நேரிலோ அல்லது http://www.ulakaththamizh.in  என்ற இணையத்தளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  ஜூன் 15 ஆம் தேதி வரை பூர்த்தி செய்ய பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும். ஜூன் 20 ஆம் தேதி  நுழைவு தேர்வு நடை பெற உள்ளது.  அதன் பின் முடிவுகள் அறிவிக்க பட்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பமாகும்.

கூடுதல் தகவல்களை பெற விரும்புவோர் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

இரண்டாம் முதன்மைச் சாலை,

மையத்தொழில் நுட்பப் பயிலக வளாகம்,

தரமணி,

சென்னை – 600113

தொலைபேசி - 044-22542992, 22540087

Anitha Jegadeesan

Krishi Jagran 

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)