News

Friday, 30 October 2020 07:45 AM , by: Elavarse Sivakumar

வேளாண்மை மற்றும் அதன் சார்ந்த தொழில்நுட்பப் படிப்புகளை பாதுகாப்புடன் கூடிய மின்னணு பலகை கணிப்பொறி (Secured Digital Pad) மூலம் மாணவர்களுக்கு, நேரடியாகவோ அல்லது இணையவழித் தொடர்பின் மூலமாகவோ பாடம் நடத்தும் புதிய முறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப புரட்சி மற்றும் தற்போது நிலவும் சூழ்நிலைகளில் வேளாண்மை மற்றும் அதன் சார்ந்த தொழில்நுட்பப் படிப்புகளை பாதுகாப்புடன் கூடிய மின்னணு பலகை வசதியுடன் கற்கவேண்டியது அவசியமாகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு கணிப்பொறி (Secured Digital Pad-யின் மூலம் மாணவர்களுக்கு, நேரடியாகவோ அல்லது இணையவழித் தொடர்பின் மூலமாகவோ பாடம் நடத்தவும், தேர்வுகளை நடத்தி மதிப்பீடு செய்யும் வகையிலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மின்னணு பலகை கணிப்பொறி கல்வி முறை ) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒருநாள் பயிற்சி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகத்தின் தேசிய உயர்கல்வித் திட்டத்தின் நிதி நிறுவன வளர்ச்சித் திட்டத்தின் நிதியுதவியுடன் நடத்தப்படும் இப்பயிற்சியின் முதற்கட்டமாக பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த 28 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு இயக்ககம் மற்றும் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்துடன் இணைந்து நடத்தும் இப்பயிற்சியை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் நீ.குமார் துவக்கி வைத்து பேசினார். அப்போது, பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் மின்னணு பலகை கணிப்பொறியை திறம்பட பயன்படுத்தி மாணவர்களுக்கு சிறப்பான மற்றும் தரமான கல்வியை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க... 

பட்டியலின விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த களை மேலாண்மைப் பயிற்சி!

நெல் சாகுபடியில் இலைச்சுருட்டு புழுத் தாக்குதல் - கட்டுப்படுத்த எளிய வழிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)