பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம் சிறு முதலீட்டாளர்களுக்கு வரப் பிரசாதமாக திகழ்கிறது. பாதுகாப்பான இடர்பாடுகள் இல்லாத முதலீடு, வரி விலக்கு என பிபிஎஃப் என்னும் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
தினமும் ரூ.417 முதலீடு செய்யுங்கள், ரூ 1 கோடி வருமானம் பெறுங்கள்:
- PPF திட்டத்தில் முதலீட்டாளர்கள் முறையாக முதலீடு செய்தால் ரூ.1 கோடி ரூபாய் வரை குவிக்க முடியும். இதற்கு முதலீட்டாளர்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும்.
- உங்கள் PPF கணக்கில் ஒரு நாளைக்கு 417 ரூபாய் முதலீடு செய்தால், மாத முதலீட்டு சுமார் 12,500 ரூபாயாக இருக்கும். அதாவது, ஒரு வருடத்திற்கு, உங்கள் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் ரூ. 1,50,00 க்கும் சற்று அதிகமாக முதலீடு செய்வீர்கள். இது அதிகபட்ச வரம்பாகும்.
- அந்த வகையில், 15 ஆண்டுகளில், திரட்டப்பட்ட மொத்தத் தொகை ரூ. 40.58 லட்சமாக இருக்கும், அதன்பிறகு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இரண்டு முறை முதிர்சிக்காலத்தை நீட்டிக்க வேண்டும்.
- இதை 25 ஆண்டுகள் வரை தொடர்ந்து செய்து வந்தால், முதிர்வு காலத்தில் உங்களுக்குக் கிடைக்கும் தொகை ரூ.1.03 கோடியாக இருக்கும்.
- இந்தத் தொகை முற்றிலும் வரி விலக்கு ஆகும். மேலும், மொத்த வட்டி கிட்டத்தட்ட 66 லட்சமாக இருக்கும். 25 ஆண்டுகளில் நீங்கள் டெபாசிட் செய்திருக்கும் மொத்தத் தொகை ரூ.37 லட்சமாக இருக்கும்.