News

Sunday, 31 July 2022 03:55 PM , by: R. Balakrishnan

IRCTC New Facility

ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிகளை மாற்றியுள்ளது. இந்த விதியின்படி, டிக்கெட் பதிவு செய்யும் முன் உங்கள் கணக்கை சரி பார்க்க வேண்டும். அதாவது வெரிஃபை செய்ய வேண்டும். புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், நீண்ட காலமாக, அதாவது குறைந்தது இரண்டு வருடங்களாக ஐஆர்சிடிசி ஆப் அல்லது இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யாத பயனர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது.

சரிபார்ப்பு செயல்முறை (Verification process)

முன்பதிவு செய்யும் முன்பாக மேற்குறிப்பிட்டுள்ள சரிபார்ப்பு செயல்முறையை கையாள வேண்டும். இப்போது அதை எப்படி சரி பார்க்கப்பட வேண்டும் என்பதை படிப்படியாக பார்க்கலாம்.

  • IRCTC செயலி அல்லது இணைய தளத்திற்குச் சென்று சரிபார்ப்பு சாளரத்தில் (வெரிஃபிகேஷன் விண்டோ) கிளிக் செய்யவும்.
  • இங்கே நீங்கள் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிட வேண்டும்.
  • இரண்டு தகவல்களையும் உள்ளிட்ட பிறகு, வெரிஃபை பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • அதன் பிறகு உங்கள் மொபைலில் OTP வரும், அதை உள்ளிட்டு மொபைல் எண்ணைச் சரிபார்க்கவும்.
  • இதே போல், மின்னஞ்சல் ஐடியில் பெறப்பட்ட குறியீட்டை உள்ளிட்ட பிறகு, உங்கள் மெயில் ஐடி சரிபார்க்கப்படும்.
  • இப்போது உங்கள் கணக்கில் இருந்து எந்த ரயிலுக்கும் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யலாம்

டிக்கெட் வரம்பு (Ticket limit)

ஐஆர்சிடிசியின் ஒரு யூசர் ஐடியில், அதுவும் ஆதார் இணைக்கப்பட்ட பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்திற்கு 12 டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்ற வரம்பு இப்போது 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஆதார் இணைக்கப்படாத கணக்கில் இருந்து 6 டிக்கெட்டுகளுக்கு பதிலாக 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

சிசிடிவி கேமரா: மருத்துவ கல்லூரிகளில் கட்டாயம்!

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: இனி கன்ஃபார்ம் டிக்கெட் ஈஸியா கிடைக்கும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)