இந்திய ரயில்வேயின் டிக்கெட் முன்பதிவு விதிகள்: நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்து, டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நபராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்திய ரயில்வே அவ்வப்போது தனது விதிகளில் பல மாற்றங்களை செய்கிறது. இது குறித்த தகவல்களும் பயணிகளுக்கு அளிக்கப்படுகின்றன. ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிகளை மாற்றியுள்ளது. புதிய விதியின்படி, டிக்கெட் முன்பதிவு செய்ய உங்கள் கணக்கை வெரிஃபை செய்ய வேண்டும்.
மொபைல் மற்றும் மின்னஞ்சல் சரிபார்ப்பு அவசியம்
இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசியின் விதிகளின்படி, டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன், பயனர்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க வேண்டியது அவசியமாகும். மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் சரிபார்ப்பு இல்லாமல், ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது.
புதிய விதியை அமல்படுத்த காரணம் என்ன?
கொரோனா தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யாத ஐஆர்சிடிசி கணக்கின் பயனர்கள் பலர் உள்ளனர். அத்தகையவர்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். நீங்களும் நீண்ட நாட்களாக இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை என்றால், முதலில் சரிபார்ப்பு செய்ய வேண்டியது அவசியமாகும். அதன் செயல்முறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஒரு கணக்கில் 24 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்
ஐஆர்சிடிசியின் ஒரு யூசர் ஐடியில் ஒரு மாதத்தில் அதிகபட்ச டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வரம்பு 12ல் இருந்து 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பது ரயில்வே பயணிகளுக்கான மற்றொரு பெரிய செய்தியாகும். ஆம், இப்போது நீங்கள் ஆதார் இணைக்கப்பட்ட பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் 24 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். முன்னதாக இந்த எண்ணிக்கை 12 ஆக இருந்தது. அதேபோல், ஆதார் இணைக்கப்படாத கணக்கில் இருந்து 6 டிக்கெட்டுகளுக்கு பதிலாக 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
மேலும் படிக்க
Cow Urine Price: பசுவின் கோமியத்தை வாங்கும் மாநில அரசு! விலை என்ன தெரியுமா?