இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 22 July, 2021 8:28 AM IST
Indian Railways

கொரோனா நெருக்கடி காரணமாக நீங்கள் வெளியில் சென்று சம்பாதிக்க முடியாத நிலையில், உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்புள்ளது. வீட்டில் இருந்தப்படியே நிறைய பணம் சம்பாதிக்க நீங்கள் விருப்பப்பட்டால், உங்களுக்கான வாய்ப்பை இந்திய ரயில்வேயின் (Indian Railways) ஐ.ஆர்.சி.டி.சி ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளத்தின் மூலம் ஒரு ஏஜென்ட்டாக பணிபுரிய விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் வீட்டில் இருந்தே தினமும் ஆயிரக்கணக்கான ரூபாயை எளிதாக சம்பாதிக்க முடியும்.

பணம் எப்படி சம்பாதிப்பது(How to make money)

இந்திய ரயில்வே  தகவல்களின்படி, நாட்டில் சுமார் 55 சதவீத மக்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை பதிவு செய்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், ஐ.ஆர்.சி.டி.சியின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு ஏஜென்ட்டாக மாறுவதன் மூலம் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும். அதாவது டிக்கெட் முன்பதிவு செய்தால் ஏஜெண்டுக்கு நல்ல கமிஷன் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க முடியும். அதேநேரத்தில் இந்த விவரங்களை பற்றி நீங்கள் நன்றாகத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

வருமானம் எப்படி கிடைக்கும்(How to get income)

ஒரு முகவராக, நீங்கள் ஏசி அல்லாத ஸ்லிப்பர் கோச் சாதாரண டிக்கெட்டை முன்பதிவு செய்தால், ஐ.ஆர்.சி.டி.சி. தரப்பில் இருந்து ஒரு டிக்கெட்டுக்கு ரூ .20 கமிஷனும், ஏ.சி வகுப்பு டிக்கெட்டை முன்பதிவு செய்தால் டிக்கெட்டுக்கு ரூ.40 வரையும் கமிஷன் கிடைக்கும். இதில் சிறந்த அம்சம் என்னவென்றால், டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஏஜென்ட்டுக்கு வரம்பு எதுவும் இல்லை. அவர் விரும்பினால், அவர் ஒரு மாதத்தில் எத்தனை டிக்கெட் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஏஜென்ட்டுக்கு இந்த நன்மையும் கிடைக்கும்(The agent also gets this benefit)

டிக்கெட்டை முன்பதிவு செய்தால், அதற்கான கமிசனும் கிடைக்கும். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு எந்த வரம்பும் இருக்காது. மேலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட்டுகளை ஆன்லைன் கணக்கு மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்மூலம் அவர்களுக்கு கமிஷனும் வழங்கப்படுகிறது.

 

ஏஜென்ட்டாக மாற என்ன செய்யவேண்டும்(What to do to become an agent)

இதற்காக நீங்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். அதன் பிறகு நீங்கள் ஸ்கேன் செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் அறிவிப்பு படிவத்தை ஐ.ஆர்.சி.டி.சிக்கு அனுப்ப வேண்டும். இதற்குப் பிறகு ஐ.ஆர்.சி.டி.சி உங்கள் தகவல் மற்றும் சரிபார்க்கும். இதற்காக, உங்களுக்கு பான் கார்டு, ஆதார் அட்டை, மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி, புகைப்படம், முகவரி போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.

மேலும் படிக்க:

இனி டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை இல்லை!அதிரடி உத்தரவு !

ஒரு ரேஷன் கடையில் 3 வருடங்கள்தாங்கோ!

English Summary: IRCTC: You can earn one lakh rupees per month from home! Full details!
Published on: 22 July 2021, 08:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now