நம் இந்திய நாட்டில் ரயில் போக்குவரத்து மிகவும் பிரதான போக்குவரதாக உள்ளது. இந்தியன் ரயில்வேஸ் பயணிகளுக்கு தரம் மற்றும் பாதுகாப்பான பயனத்தை உறுதிசெய்வதற்கு பல முயர்ச்சிகளை எடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ரயிலை பயணிகள் பலர் பொதுவாக டிக்கெட்டுகளை IRCTC யின் இணையதளம் அல்லது செயலி மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்கிறார்கள்.
சமீபத்தில் இந்தியன் ரயில்வேஸ் இணையத்தளத்தில் டிக்கெட்களை முன்பதிவு செய்பவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அந்த புதிய வழிகாட்டுதல்கள் என்ன என்பதை பின்வருமாறு காண்போம்.
கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு ரயில்சேவை தொடங்கிய பின், IRCTC செயலி மற்றும் இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிகளை மாற்றியது. ஆகையால் உங்கள் கணக்குகளை சரிபார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.
புதிய விதிகளின் படி, டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன், பயனர்கள் தங்கள் கணக்கை நிச்சயம் சரிபார்க்க வேண்டும்.
ஆனால் ஏறத்தாழ 40 லட்சம் பயனர்கள் தங்கள் கணக்கை இன்னும் சரிபார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கணக்கைச் சரிபார்க்காத பயனர்கள் எதிர்காலத்தில் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் நீங்கள் உங்களது IRCTC கணக்கை மீண்டும் ஒரு முறை சரிபார்ப்பது மிகவும் அவசியம் ஆகும்.
IRCTC வழங்கிய புதிய விதியின் கீழ், ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் பயனர்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க வேண்டியது அவசியம்.
IRCTC ஆல் செய்யப்பட்ட மாற்றம் கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கி பல மாதங்களாக இணையதளம் அல்லது செயலி மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யாத பயணிகளுக்குப் பொருந்தும்.
உங்கள் கணக்கை நீங்கள் இன்னும் சரிபார்க்கவில்லை என்றால், சரிபார்ப்பு செயல்முறையை விரைவில் முடிக்கவும். இதைச் செய்து முடித்த பிறகு, டிக்கெட் முன்பதிவு செய்வதில் எந்த வித சிக்கலையும் சந்திக்க வேண்டியதில்லை என்று இந்தியன் ரயில்வேஸ் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
மாடுகளின் கொம்புகளுக்கு சிவப்பு வர்ணம் தீட்டக்கோரி வழக்கு-அரசு பதிலளிக்க உத்தரவு
வேளாண் பட்ஜெட்: விவசாயிகள் கருத்து தெரிவிக்க தமிழக அரசு அழைப்பு!