மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 May, 2019 7:21 PM IST

சர்வதேச அரிசி ஆராய்ச்சி கழகம் (ஐ.ஆர்.ஆர்.ஐ.) வாரணாசியில்  அமைந்துள்ளது. இந்த கழகத்தில் அரிசி மற்றும் அரிசி சார்த்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்த கழகம் பிலிப்பைன்ஸ் அரிசி ஆராய்ச்சி கழகம் மற்றும் பங்களாதேஷ் அரிசி ஆராய்ச்சி கழகம் இணைத்து இந்த பொன்னிற அரிசியினை உருவாக்கி உள்ளனர். 

ஐ.ஆர்.ஆர்.ஐ. முக்கிய நோக்கம் குறைந்த தண்ணீரில், குறைவான சர்க்கரை சத்துடன், அதிக ஊட்டச்சத்துடன் கூடிய நெல் வகைகளை உருவாக்குவது, அரிசி உற்பத்தியை பெருக்குவது மற்றும்  பராமரிப்பது போன்றவற்றை செய்து வருகிறது.

ஐ.ஆர்.ஆர்.ஐ. மற்றும் இதர இரண்டு ஆராய்சசி கழகங்கள் கடந்த 18 ஆண்டுகளாக இந்த அரிசியினை உருவாகும் ஆராய்சசியில் ஈடுபட்டு வந்தனர். இந்த பொன்னிற அரிசியானது தற்போது இந்தியா ஐ.ஆர்.ஆர்.ஐ. வளாகத்தில் விளைவிக்கபட்டு வருகிறது.

பொன்னிற அரிசியானது  முறையான தட்பவெப்ப நிலையில் வளர்க்கப்பட்டு அறுவடைக்கு காத்திருகிறது. இந்த அரிசியின் சிறப்பு என்னவெனில் இதனை விளைவிக்க குறைந்த அளவு தண்ணீர் தேவை படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள். மற்ற அரசி வகைகளுடன் ஒப்பிடுகையில்  30 % குறைவான தண்ணீர் தேவை படும் என்று கண்டு பிடித்துள்ளனர்.

 பொன்னிற அரிசியில் பல சத்துக்களை சேர்த்து உருவாக்கி உள்ளனர். இதில்  பீட்டா காரோடேனே என்ற புரத சத்து உள்ளது. மேலும் இதில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் வைட்டமின் A சத்து நிறைந்துள்ளது.

பெரும்பாலான அரிசி பிரியர்களுக்கு ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை இவ்வகை அரிசி சரி செய்யும். இதன் தரத்தை சர்வதேச அரிசி ஆராய்ச்சி கழகங்கள் உறுதி செய்துள்ளது. ஒரு கப் அரிசியானது ஒருநாளுக்கு தேவையான 50% வைட்டமினை தரும் என உறுதி செய்துள்ளது.

பொன்னிற அரிசியினை மூன்று மாதங்கள் வரை சேமித்து உபயோகிக்க முடியும். இதன் தன்மை மற்றும் ஊட்டச்சத்து  மூன்று மாதங்கள் வரை மட்டுமே நீடித்திருக்கும். 

தற்போது இந்த அரிசியினை மற்ற வகை அரிசிகள் போல விவசாகிகள் அனைவரும் பயிரடவும், அனைத்து மக்களும் வாங்கும் விலையில் சந்தை படுத்தவும் முயற்சி எடுத்து வருகிறது என  ஐ.ஆர்.ஆர்.ஐ. கூறி உள்ளது.

Anitha Jegadeesan

English Summary: IRRI, India And Philippians In Collaboration With Bangladesh Rice Research Institute, Developed Golden Rice:Vitamin A Fortified Rice, Which Will Be Available Soon
Published on: 25 May 2019, 07:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now