News

Tuesday, 23 August 2022 06:44 AM , by: R. Balakrishnan

Aadhar - Voter id

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம், கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. அதன்படி, பலரும் தங்களுடைய ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இணைப்பு கட்டாயமா என்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆதார் - வாக்காளர் அட்டை (Aadhar - Voter id)

தேர்தல் ஆணையத்தின் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சில பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில், வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களின் பெயருடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுவிடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இத்தகைய செய்திகள், இந்திய தேர்தல் ஆணைய வழிமுறைகளுக்கு எதிராக உள்ளது. தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் பெயருடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயம் ஆக்கவில்லை.

வாக்காளர்கள் சுயமாக முன்வந்து தங்களின் பெயருடன் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று கூறியுள்ளது.

மேலும் படிக்க

ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு: நாளை முதல் துவக்கம்!

ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை இணைப்பு: மத்திய அரசு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)