மத்திய அரசின் பொது பட்ஜெட் நாளைத் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், PM- Kisan நிதி 10 ஆயிரமாக உய்ர்த்தப்படுமா?- பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
பட்ஜெட் தாக்கல் (Budget)
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், அந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்வது வழக்கம். அதன்படி 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பொது-பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் பாமர மக்கள் முதல் தொழில் அதிபர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.
சமாதானப்படுத்தும் முயற்சி (Trying to convince)
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் எனவும் அவை, 60 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை சமாதானப்படுத்தும் வகையில் இருக்கும் எனவும் தெரிகிறது.
இதில் குறிப்பாக விவசாயிகளுக்கான நிதியுதவி 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தபட வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டிற்கு ரூ.6000 (Rs.6000 per year)
தற்போது, விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6000 ஆயிரம் ரூபாய், அதாவது மாதம் 500 ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை தலா ரூ.2000 வீதம், 3 தவணைகளாக அளிக்கப்படுகிறது. இதுவரை 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.
நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு (Increase in financial allocation)
PM Kisan திட்டத்திற்கு கடந்த 2019-20ம் நிதியாண்டில் ரூ.1.51 லட்சம் கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, 2020-21ம் நிதியாண்டில் ரூ.1.54 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இம்முறையும் நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, விவசாயிகளு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படலாம் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றன.
இந்த பட்ஜெட் குறித்து விவசாயிகள் பலர் தங்கள் எதிர்பார்ப்பைத் தெரிவித்துள்ளனர்.அவற்றின் தொகுப்பு இதோ
நாகராஜ்
விவசாயி
நீண்டகாலமாக எங்களுடைய எதிர்பார்ப்பு எதுவென்றால், பயிர்க்கடன் தள்ளுபடிதான். இந்த தள்ளுபடியை மத்திய அரசு அறிவித்தால், அது மிகப்பெரிய பொருளாதாரச் சுமையில் இருந்து எங்களைக் காப்பாற்றும்.
தேவி வேலுசாமி
இயற்கை விவசாயி
விவசாயிகளின் எந்தப் பொருளுக்கும் நிரந்தர விலை கிடைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். அதேபோல், எங்கள் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கு உதவி செய்வதற்கான அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
மனோன்மணி
இயற்கை விவசாயி
என்னைப் பொருத்தவரை, நஞ்சில்லா உணவுதான் நம்முடையைத் தற்போதையத் தேவை. எனவே மலடாகிவிட்ட மண்ணை உயிர்பித்து, விஷயமில்லா விளைபொருட்களை உற்பத்தி செய்ய அரசும் முனைப்பு காட்ட வேண்டும். வெளிநாடுகளில் இருந்து உரங்களை இறக்குமதி செய்வதை விட்டுவிட்டு, இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு வழங்கி, ஆரோக்கியமான மண்ணை, நம் எதிர்கால சந்ததிக்கு அளிக்க உதவும் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
சிவராஜன்
விவசாயி
விவசாயிகள் பிரச்னை விஷயத்தில், கண்டுகொள்ளாத மத்திய அரசு, பட்ஜெட்டிலாவது விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு அறிவிப்பு வெளியிட வேண்டும். PM-Kisan நிதியுதவியை ரூ.10,000 வரை உயர்த்த வேண்டும், மானியம் பெறுவதற்கான விதிகளை எளிமைப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பாரபட்சமின்றி இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்த விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யப்படுமா என்பது நாளைத் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் தெரியவரும்.
மேலும் படிக்க...
ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க - ரூ.6 லட்சம் மானியம்!