News

Friday, 12 November 2021 08:35 AM , by: Elavarse Sivakumar

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள், கியாஸ், பெட்ரோல் கிடையாது என மகாராஷ்டிர மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொடூரக் கொரோனா (Cruel corona)

இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளை, கடந்த 2 ஆண்டுகளாக கொடூரக் கொரோனா வைரஸ் தொற்று உலுக்கி எடுத்தது. தற்போது அதன் தாக்கம் ஓரளவுக்குக் குறைந்த வந்தபோதிலும், தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு மக்களுக்குத் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாகத் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனாத் தடுப்பூசிப் போடுக்கொள்வோரை ஊக்குவிக்க பல்வேறுப் பரிசுத் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதிர்ச்சி வைத்தியம்

இருப்பினும், கொரோனா வைரஸின் வீரியத்தை உணராமல், விதண்டாவாதம் பேசிக்கொண்டு ஒருசிலர் தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர். இத்தகைய மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது, மகாராஷ்டிர மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்ட நிர்வாகம். அது என்ன வைத்தியம் எனக் கேட்கிறீர்களா?

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள், கியாஸ், பெட்ரோல் கிடையாது என அவுரங்காபாத் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதான் அந்தப் புதிய வைத்தியம்.

நிர்வாகம் நடவடிக்கை

  • இதன்படி, அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள், சமையல் கேஸ் ஏஜென்சிகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் தடுப்பூசி சான்றிதழ்களைச் சரிபார்க்க வேண்டும்.

  • குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்ட மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை வழங்கவேண்டும்.

  • இந்த உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.

கொரோனா தொடங்கியக்காலத்தில் தடுப்பூசிச் செலுத்திக்கொள்ள மக்கள் தயக்கம் காட்டினாலும், அரசின் போதுமான விழிப்புணர்வு நடவடிக்கையினால் மக்கள் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ள தொடங்கினர். மகாராஷ்டிரா மாநிலத்தில் 74 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

காற்றழுத்த தாழ்வு மண்டலம்-இன்று மாலை கரையைக் கடக்கிறது!

அதிதீவிரக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி 11-ந்தேதி சென்னையை நெருங்கும்: மிக மிக பலத்த மழை எச்சரிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)