திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவோர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி கோவில் (Tirupati Temple)
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில், உலகப் புகழ் பெற்றது. இங்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பிற மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் நாள்தோறும் வருகைதந்து தரிசனம் செய்வது வழக்கம்.
கொரோனா தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் பக்தர்களை தவிர மற்ற மாநில பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்திருந்தது.
தரிசனத்திற்கு அனுமதி (Permission for vision)
இந்நிலையில், செப்டம்பர் 20ம் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கியது. அதேநேரத்தில் , இரவு 11.30 மணி வரை இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாகவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.
அதேபோல், அடுத்த மாதம் ஏழுமலையானை தரிசிப்பதற்காக 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் நேற்று தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
புதிய விதிமுறைகள் (New Terms)
இந்நிலையில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகளை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
தடுப்பூசி(Vaccine)
அதன்படி, திருப்பதிக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் 2 டோஸ் கொரோனாத் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழை அளிக்க வேண்டும்.
கோவிட் பரிசோதனை (Covid Test Report)
இல்லையேல் 72 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கோவிட் பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் வழங்க வேண்டும்,' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவஸ்தானத்தில் இந்த அதிரடி அறிவிப்பு பக்தர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மேலும் படிக்க...
தடுப்பூசிக்கு ஆன்ட்ராய்ட் போன் பரிசு – ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!
இன்னும் 6 மாதங்கள்தான்- கொரோனா முடிவுக்கு வந்துவிடும் என அறிவிப்பு!