தமிழகத்தில் ஓய்வு பெறுகிறது வடகிழக்கு பருவமழை. வடகிழக்கு பருவமழை காலம் நிறைவடையும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை அய்வு மையம் வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு குறைந்து காணப்பட்ட நிலையில், சென்னையில் இந்த வாரத்தின் முதல் நாட்களில் மிதமான மழை பெய்தது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில்16, 17 ஆகிய தேதிகளில் மிதமான மழை பொழிவு காணப்பட்டது.
அந்த வகையில் வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. வடகிழக்கு பருவமழையானது, நாளை (22.02.2022) தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகிறது. மேலும் இன்று தொடங்கி, ஐந்து நாட்களுக்கான வானிலையை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
21.01.2022 முதல் 25.01.2022 வரை:
21.01.2022 முதல் 25.01.2022 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரம், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் எனவும் குறிப்பிடுகிறது வானிலை ஆய்வு மையம்.
- கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை என்பதும் குறிப்பிடதக்கது.
- தற்போது, மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
கடந்த சில நாட்களாகவே, வானிலையின் மாற்றம் புரியாமல், மழைக்கும், பனிக்கும் அஞ்சிய மக்களுக்கு, இது ஒரு நல்ல செய்தியாகும்.
மேலும் படிக்க:
காய்கறி விலையில் மாற்றம்.. கோயம்பேடு சந்தையின் காய்கறி விலை பட்டியல்!
BECIL ஆட்சேர்ப்பு 2022: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு, விவரம் உள்ளே!