News

Thursday, 30 June 2022 08:59 PM , by: Elavarse Sivakumar

500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்திற்கு அருகில் பச்சை நிற பட்டை இருந்தால், அது போலி ரூபாய் நோட்டு என மக்களிடையேத் தகவல் பரவி வருகிறது.

இணையதளங்களில் போலி நோட்டுகள் மற்றும் நாணயங்களை அடையாளம் காணும் முறையை பற்றி அவ்வப்போது தகவல் வெளியாவது வாடிக்கை. அந்த வகையில், கடந்த சில நாட்களாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

போலி ரூபாய் நோட்டு

இதன்படி, 500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்திற்கு அருகில் பச்சை நிற பட்டை இருந்தால், அது போலி நோட்டு என்ற தகவல் பரவி வருகிறது.

வழக்கமாக, உண்மையான நோட்டுகளில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்திற்கு அருகில் தான், பச்சை நிற ஸ்ட்ரிப் இருக்கும் என்றும் கூறப்பாட்டுள்ளது.

'காந்திஜியின் அருகில் பச்சைக் கீற்று போடப்பட்டிருக்கும் அந்த 500 ரூபாய் நோட்டுகள் போலி என்பதால் அதனை தவிர்க்க வேண்டும். தயவுசெய்து இந்த செய்தியை உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பவும் என்ற செய்தி பரவி வருகிறது ஆனால், இந்த செய்தியை சரிபார்த்தபோது அது போலியானது என தெரியவந்தது.

டுவிட்டர் பதிவு

வதந்திகளுக்கு மத்தியில், PIB தனது தகவல் சர்பார்ப்பு கணக்கான PIB Fact Check என்னும் கணக்கில், இந்த தகவல் வெறும் வதந்தி என்றும் இரண்டு வகை நோட்டுக்களும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என ட்வீட்டரில் பதிவு செய்தது.மேலும் வைரலாகும் தகவல் போலியானது என்றும் அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகையான நோட்டுகளும் உண்மையான கரன்சி நோட்டுகள் என்று உறுதிபடக் கூறியுள்ளது.

அறிவுறுத்தல்

போலியான, உண்மைக்கு புறம்பான, பொய் செய்திகளை பரப்பும் படங்கள், வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு PIB கூறுகிறது. அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து பின்னர் ஆதாரத்துடன் விளக்கம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

7 டன் ரசாயன மாம்பழங்கள் - அதிரடி பறிமுதல்!

வங்கிக்கணக்கில் வந்த ரூ.1.42 கோடி சம்பளம்- தப்பியோடிய ஊழியர்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)