ஈஷா அறக்கட்டளையின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ஈரோட்டில் மரம் நட விரும்பு நிகழ்ச்சி வரும் டிசம்பார் 6ம் தேதி நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்வேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காவேரி கூக்குரல் இயக்கம்
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு சார்பில் காவேரி கூக்குரல் என்ற மாபெரும் சுற்றுச்சூழல் இயக்கம் கடந்தாண்டு தொடங்கப்பட்டது. விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த இயக்கம் மரம்சார்ந்த விவசாய முறையை ஊக்குவித்து வருகிறது.
இதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதன் விளைவாக, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இதுவரை 86 லட்சம் மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.
மரம் நட விரும்பு நிகழ்ச்சி
இந்த சமூகப் பணியில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோரையும் ஈடுப்படுத்தும் விதமாக மரம் நட விரும்பு என்ற நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கப்பட்டது.
அதன்படி, ஈரோடு மாவட்டம் குளூர் பஞ்சாயத்து, சிவலிங்கபுரம் கிராமத்தில் உள்ள விவசாயி திரு. கே.எஸ்.ராஜேஸ்வரன் அவர்களின் நிலத்தில் இந்நிகழ்ச்சி நாளை மறுநாள் (டிசம்பர் 6) நடைபெற உள்ளது.
இதில் சுற்றுச்சூழல் ஆர்வம் கொண்ட இளைஞர்களும் பொதுமக்களும் தன்னார்வலர்களாக பங்கேற்று மரங்களை நடலாம். ஆர்வம் உள்ளவர்கள் 86681 72967 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
பயனாளிகள் ரெடி! - ஜனவரிக்குள் விலையில்லா ஆடு மாடுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு!
மானிய விலையில் விதை 'பாக்கெட்' - காய்கறிகள் உற்பத்தியை பெருக்க திட்டம்!!