தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ரேசன் கடைகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில் கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ரேசன் கடைகளை அப்டேட் செய்யும் திட்டத்தினால் தற்போது பல ரேசன் கடைகள் புதுப்பிக்கப்பட்டு, சர்வதேச தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது.
நம்ம பகுதி நம்ம ரேஷன் கடை
பொதுமக்களுக்கு மலிவான விலையில், உணவு பொருள்கள் வழங்குவது முதல் அரசின் நலத் திட்டங்கள் வரை அனைத்துமே ரேசன் கடைகள் மூலமாகவே சென்றடைகின்றன. இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் "நம்ம பகுதி நம்ம ரேஷன் கடை" எனும் புதிய திட்டத்தை தொடங்கி இருக்கிறார். இதன் மூலம் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உடன் இணைந்து, ரேசன் கடைகளுக்கு வர்ணம் பூசுவது உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஐஎஸ்ஓ தரச்சான்று (ISO Certificate)
நம்ம பகுதி நம்ம ரேசன் கடை திட்டத்தின் மூலம் பல கட்டிடங்கள் மற்றும் பாழடைந்த கட்டிடங்கள் போன்றவை புதுப் பொலிவுடன் தயாராகி வருகிறது. மேலும் அரசின் இந்த நடவடிக்கையால் ரேசன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று (ISO Certificate) கிடைத்து வருகிறது. இதுவரையில் 3,000 ரேசன் கடைகள் புதுப்பொலிவுக்கு மாறியுள்ள நிலையில், 5,784 ரேசன் கடைகளுக்கு சர்வதேச தரச்சான்று கிடைத்துள்ளது.
மொத்தத்தில் தரத்தை வெளிப்படுத்தும் பிரிவில், 3,753 ரேசன் கடைகளுக்கும், பாதுகாப்பு மேலாண்மை பிரிவில் 2,031 ரேசன் கடைகளுக்கும் சர்வதேச தரச்சான்று கிடைத்துள்ளது. இதனால் கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
மேலும் படிக்க
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு ஒரே நேரத்தில் 3 ஜாக்பாட்: இதெல்லாம் உயரப் போகுது!
குழந்தைகளுக்கு வந்தாச்சு பேபி பெர்த் வசதி: IRCTC முக்கிய அறிவிப்பு!