இந்நிலையில் விண்ணில் ஏவுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் நேரத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது தெரிந்தது. இதன் காரணமாக கடைசி நிமிடத்தில் விண்கலம் ஏவப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து கோளாறுகள் சரி செய்யப்பட்டு இன்று பிற்பகல் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலம் மதியம் 2:43 மணி நேரத்தில் விண்ணில் செலுத்தப்படுகிறது. மேலும் விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இதற்கான 20 மணி நேர கவுன்டவுன் நேற்று தொடங்கியது..
கடந்த 2008 ஆம் ஆண்டு நிலவை ஆயுவு செய்ய இஸ்ரோ சந்திராயன் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. 312 நாட்கள் நிலவை சுற்றிவந்து ஆய்வு நடத்தியது. அப்போது பனிக்கட்டி வடிவில் நிலவும் மேற்பரப்பில் நீர் இருப்பதை உறுதி செய்தது. மெக்னீசியம், அலுமினியம், சிலிக்கான் உள்ளிட்ட தாதுக்கள் நிலவின் பரப்பில் படிமங்களாக இருப்பதை கண்டறிந்து அதனை படமாக எடுத்து ஆதாரமாக அனுப்பியது.
மேலும் ரூ 386 கோடி மட்டுமே இத்திட்டத்திற்கு செலவானதால் இந்தியா மற்ற உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் இந்திய புதிய இலக்குடன் சந்திராயன்-2 விண்கலத்தை செயல் படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. மேலும் இத்திட்டத்திற்காக ரூ 604 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் இந்த சந்திராயன்-2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.
K.Sakthipriya
Krishi Jagran