News

Tuesday, 25 August 2020 07:18 AM , by: Elavarse Sivakumar

தபால்களைக் கொண்டு சேர்க்கும் அஞ்சலகங்கள், கிராமப்புற மக்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழ்கின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை, லட்சக்கணக்கானோர் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கின்றனர்.

அவ்வாறு தொடங்கப்பட்ட சேமிப்புக்கணக்கில், 50 ரூபாய் மட்டும் மினிமம் பேலன்ஸ், அதாவது குறைந்தபட்ச இருப்புத்தொகையாக வைத்துக்கொள்ளலாம்.

ரூ.500 கட்டாயம் (Minimum Balance)

ஆனால், அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட புதிய விதிகளின்படி, சேமிப்புக்கணக்கில், குறைந்தது 500ரூபாய் மினிமம் பேலன்ஸ்-ஸாக வைக்க வேண்டியதுக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ரூ.100 அபராதம் (Fine)

மினிமம் பேலன்ஸாக ரூ.500 வைக்கத் தவறினால்,  அந்த நிதியாண்டு முடிவில் உங்கள் கணக்கில் இருந்து 100ரூபாய் அபராதமாகப் பிடித்தம் செய்யப்படும்.

கணக்கு முடக்கம் (Account Closed)

இது மட்டுமல்ல, இன்னொரு மாற்றமும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி சேமிப்புக்கணக்கில் எந்த பைசாவும் இல்லாது இருந்தால், அதாவது ஜீரோ பேலன்ஸ் உள்ள சேமிப்புக் கணக்குகள் அஞ்சலக நிர்வாகத்தால் உடனடியாக முடக்கப்படும்.

ஆதார் இணைப்பு கட்டாயம் (Aadhaar link)

இதேபோல், உங்கள் அஞ்சலக சேமிப்புக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இல்லையென்றால், அரசு வழங்கும் மானியங்கள் எதுவும் உங்களுக்கு வந்து சேராது.

அஞ்சலக சேமிப்புதாரர்கள், இந்த மாற்றங்களைக் கவனத்தில் கொள்ளாவிட்டால், இழப்பை சந்திக்க நேரிடும்.

மேலும் படிக்க...

ரேஷன் கார்டு இல்லாமல் ரேஷன் பொருட்கள் வாங்குவது எப்படி? விபரம் உள்ளே!

அஞ்சலக சேமிப்புக் கணக்கிலும், இனி அரசு மானியங்களைப் பெறலாம் - விபரங்கள் உள்ளே!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)