அரசு ஊழியர்களுக்கு புதிய விடுமுறைக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்பை விட கூடுதல் விடுமுறை கிடைக்கும். உறுப்பு தானம் செய்த பிறகு, மத்திய அரசு ஊழியர் இப்போது 42 நாட்கள் சிறப்பு விடுமுறையைப் பெற முடியும்.
அதிக நாட்கள் விடுப்பு
அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஒரு ஊழியர் சார்பாக உடலின் எந்த பாகமும் தானமாக வழங்கப்பட்டால், அது ஒரு பெரிய அறுவை சிகிச்சை என்றும், இதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுவதோடு அதிலிருந்து மீண்டு வர நாட்கள் எடுக்கும் என்பதால் விடுமுறை நாட்கள் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக மனிதர்களுக்கு உதவுவதற்காகவும், மத்திய அரசு ஊழியர்களிடையே உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதற்காகவும், எந்தவொரு ஊழியருக்கும் அதிகபட்சமாக 42 நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இதற்கான விதிமுறைகளும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. தற்போதுள்ள விதிகளின்படி, ஒரு காலண்டர் ஆண்டில் அதிகபட்சமாக 30 நாட்கள் விடுப்பு சாதாரண விடுப்பாக (கேசுவல் லீவ்) அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில், புதிய விதி 2023 ஏப்ரல் 25 முதல் அமலுக்கு வந்துள்ளது.
அனைவருக்கும் பொருந்தாது
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், விடுமுறைக்கான இந்த விதியின் கீழ் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவு ஊழியர்களுக்கு மட்டுமே இந்த விதி அமல்படுத்தப்படுகிறது. விடுமுறை தொடர்பான இந்தப் புதிய கொள்கை, ரயில்வே ஊழியர்கள், அகில இந்தியப் பணியாளர்களுக்குப் பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.
மருத்துவரின் பரிந்துரை
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தானம் செய்பவரின் உறுப்பை அகற்ற அறுவை சிகிச்சை செய்து அதன் பிறகு குணமடைய 42 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அரசு பதிவு செய்யும் மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் விடுமுறை அளிக்கப்படும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே இவ்வகை விடுமுறையைப் பெறலாம்.
மேலும் படிக்க
தமிழக ரேஷன் கடைகளில் 2 புதிய வசதிகள்: மே 10 முதல் அமலுக்கு வரும்!
மூத்த குடிமக்களுக்கு சிறந்த வசதி அறிமுகம்: இனி மொபைல் இருந்தால் போதும்!