News

Wednesday, 06 July 2022 08:36 AM , by: R. Balakrishnan

Ration Shop

தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் காதி பொருள்கள், அரசு உப்பு மற்றும் பனைவெல்லம் விற்கும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஊக்கத்தொகை (Incentive)

தமிழக அரசின் அறிவிப்பில், தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சில நிபதனைகள் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

அதன்படி ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் என்றும்,கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் என்றும், நகர்ப்புற ரேஷன் கடைகளில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு நிர்ணயித்த இந்த வரம்பை பூர்த்தி செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அந்த மாதம் செலுத்தப்படும் விற்பனை தொகையில் ஒரு சதவீதம் ஊக்க தொகையாக கூட்டுறவு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது இந்த அறிவிப்பு ரேஷன் கடை ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

வாட்ஸ் ஆப்பில் வங்கி சேவை: களத்தில் இறங்கும் எஸ்.பி.ஐ வங்கி!

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு: பென்சன் விதிமுறைகளில் மாற்றம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)